29 Jul 2025 10:35 amFeatured
பாவாணர் பேரவையின் சிறப்பு நிகழ்வு
27.07.2025 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு டோம்பிவிலி மேற்கு ஜோந்தலே பள்ளியில் வைத்து பாவாணர் பேரவை-மும்பை சார்பில் தமிழரின் தடைக்கற்கள் என்றத் தலைப்பில் சூலூர் பாவேந்தர் பேரவை-கோவை யின் நிறுவுநரும் திமுக கல்வியாளர்கள் அணியின் தலைவருமான புலவர் செந்தலை கவுதமன் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
புலவர் செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சு தமிழுணர்வூட்டுவதாக அமைந்திருந்தது, தேவநேய பாவாணர் அவர்களின் தமிழ்த்தொண்டு மற்றும் அவரின் செயல்பாடுகள், குணநலன் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்,
அவரது இறுதி நாட்கள் மற்றும் அவர் கலந்துகொண்ட கூட்டம் பற்றியும் அவரது மரணம் பற்றியும் கண்ணீர் மல்க எடுத்துரைத்தது கூட்டத்தில் அனைவரையும் கண் கலங்கவைத்தது
நிகழ்வுக்கு தமிழ் லெமுரியா அறக்கட்டளை நிறுவுநர் சு.குமணராசன் தலைமை தாங்கினார்,
எஸ் அசோக்குமார் முன்னிலை வகித்தார்
கி.வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார் பாவலர் நெல்லை பைந்தமிழ், பாவரசு வதிலை பிரதாபன்,
வே. சதானந்தன், வெ. இராசேந்திரன், முத்தமிழ் தண்டபாணி, சோ. வேல்முருகன், க.நந்தகோபால்,
வீரை சோ பாபு, ஆ பாலசுப்பிரமணியன், எம்.இ,முத்து ஆகியோர், சிறப்புரையாற்றினர்.
எஸ். அசோக் குமார், சிவக்குமார் சுந்தர்ராஜ், அ.பாண்டு, எம்.கோவிந்தராஜ், உ. சுரேஷ், செ. இராசா சுவாமி, சந்தன குமார் , வானமாமலை , ஊ. முத்து, அருண் ஆறுமுகம், எஸ் சுப்பிரமணியன், சு. குமரன் , இரத்தினம் , பி. கண்ணன், கலைவாணி , அ. அருணாச்சலம், இ பெருமாள், மாணிக்கவாசகம், முத்துகிருஷ்ணன், முருகானந், என். பாலசுந்தரம்,ஆ.சு. அழகர் ராஜா, எ.சாமுவேல் பால்,சி சுப்பிரமணியன், சி.குமார், ஆ.பாலசேகர், பா.திலகவதி, கல்யாணசுந்தரம், எம். இ.முத்து,சி.குமார், ந.தமிழரசன், மா. கதிரவன், திரு அன்பழகன், அ. செல்வமணி, கலியபாபு, சு.சாமி, எல்.எஸ்.இராமநாதன், இராம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கித்தனர். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்
நிறைவாக மு. மகேஷ் நன்றியுரையாற்றினார்