04 Jan 2020 11:05 amFeatured

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75
எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த போது சட்டப்பேரவையில் பி.ஹெச்.பாண்டியன் சபாநாயகராக பணியாற்றியவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
பி.ஹெச்.பாண்டியனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 10-ம் தேதி வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்த அவர், இன்று மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பி.ஹெச். பாண்டியன் (P. H. Pandian)
இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார் பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக பதவிவகித்தார். 1989இல் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90