09 Nov 2019 8:31 pmFeatured

பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி 18.08.2019 ஞாயிறு அன்று பாண்டுப் பிரைட் உயர்நிலைப் பள்ளியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
மும்பையில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு முதலாவது பரிசை வென்ற நாராயணா ஆங்கில மேல்நிலைபள்ளி மாணவி சுவேதா ஸ்ரீ குணசேகரன் சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 10.11.2019 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு முலுண்ட்-(மே),J.N ரோடு, வாணி வித்யாலா அருகிலுள்ள வித்யா மந்திர் பள்ளியில்வைத்து நடைபெறுகிறது,
பரிசு வென்ற மாணாக்கர்களும்,பெற்றோரும்,பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37