22 Feb 2020 8:53 amFeatured

வழக்குரைஞர் மானமிகு அ.அருள்மொழி பங்கேற்பு
மும்பை திராவிடர் கழகத்தின் சார்பாக அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா 23-02-2020 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மாதூங்கா மைசூர் அரங்கில் நடைபெறுகிறது
இந்த நிகழ்விற்க்கு மும்பை திராவிடர் கழகத்தின் தலைவர் பெ.கணேசன் தலைமையேற்கிறார்
செயலாளர் இ.அந்தோணி வரவேற்புரையாற்ற ,மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தொடக்கவுரையைத்தொடர்ந்து தந்தை பெரியாரின் படத்தினை திருமதி இரத்தினம் தொல்காப்பியனார் மற்றும் அன்னை மணியம்மையார் படத்தினை திருமதி தவமணி சண்முகராசன் திறந்து வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
மானமிகுவாளர்கள் சிறீவள்ளி,கனிமொழி , நங்கை , ஹேமலதா , பொற்செல்வி, பேரரசி , ஜூலியட் , பேபி விஜயலட்சுமி , செல்வி , வளர்மதி , மனோன்மணி , உமா , மல்லிகா , புஷ்பம் , வெண்ணிலா , பொன்மலர் , சொரிமுத்து , ஈஸ்வரி , கவிதா , இராசகுமாரி , சுகன்யா மற்றும் சுபிதா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், தமிழ் இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவனர் சு.குமணராசன், மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் , மும்பை திமுக பொறுப்பாளர் கரூர்இரா.பழனிச்சாமி , திராவிட மறுமலர்ச்சி நடுவத்தின் நிறுவனர் ஜெ.ஸ்ஃடீபன்ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச் செயலாளர் ஞான.அய்யாபிள்ளை , எழுத்தாளர் புதியமாதவி , பாவலர் நெல்லை பைந்தமிழ் , மகிழ்ச்சி மகளிர் பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் வனிதா மற்றும் மும்பை திராவிடர் கழகத்தின் பொருளாளர் அ.கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்க இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் பொன்.அன்பழகன் (தலைமை நிர்வாக அதிகாரி - MIDC) கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக பரப்புரைச் செயலாளர் ,வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்
மானமிகுவாளர்கள் வெ.சித்தார்த்தன் சோ.ஆசைத்தம்பி , ஆர்.பரமசிவம் , தொல்.காமராஜ் , சோ.சௌந்தரபாண்டியன் , மு.கணேசன் , ம.இராஜசேகர் , அ.இராதாகிருஷ்ணன் , க.கௌதமன் , இ.இசக்கிபாண்டியன் , தொல்.விஜயன் , அய்.செல்வராஜ் , கரு.பிரபாகரன் , ரோபின்.செல்வராஜ் மற்றும் அழ.தமிழரசன் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைக்கின்றனர்
நிறைவாக மும்பை திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர் ஜெ.வில்சன் நன்றியுரையாற்றுகிறார்.
மும்பை திராவிட இயக்க தோழர்கள் , எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கிறார்கள்..






Users Today : 29
Total Users : 106475
Views Today : 33
Total views : 434202
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37