Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பாஜக. எம்.எல்.எ தமிழ்செல்வனுக்கு கண்டனம் மற்றும் ஆ. இராசாவின் சனாதனப் பேச்சின் விளக்க கூட்டம்

29 Sep 2022 11:19 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures BJP MLA

மும்பை மாநகர் மற்றும் புறநகர் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினருமான திரு ஆ. இராசாவின் சனாதனப் பேச்சின் விளக்கம் மற்றும் சயான் கோலிவடா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் இரா தமிழ் செல்வன் கண்டனக் கூட்டம் மும்பை திமுக தலைமை பணிமனை கலைஞர் மாளிகையில் 28.09.2022 புதன்கிழமை மாலை 7,00 மணியளவில்புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற, மாநகர் திமுக பொறுப்பாளர் கருவூர் இரா,பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார்.

புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மாநகர் அவைத்தலைவர் வே.ம.உத்தமன், மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், மும்பை திராவிடர் கழகத்தலைவர் பெ. கணேசன், பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அ. இரவிசந்திரன், மூத்த தலைவர்கள் என்.வி.சண்முகராசன், பணகுடி மா. சண்முகவேல், தானே திமுக கே.ஏ.ஜாகீர் உசேன், வக்கோலா கிளை சேலம் மா. சீனிவாசன், புறநகர் திமுக துணைசெயலாளர் இளங்கோ அப்பாதுரை,

மாநகர் திமுகதுணைச் செயலாளர் இடையன்குளம் பாஸ்கர், பீவண்டி கிளைசெயலாளர் மெஹபூப் பாட்ஷா, இலக்கிய அணி ஜெயினுலாப்தீன்,தாராவி கிளை தே. ஸ்டீபன் ஜெயராஜ், பொய்சர் மாரியப்பன், ஜெய்பீம் அறக்கட்டளை நிறுவனர் குட்டி, மதியழகன், மனித நேய சங்கர் திராவிட்,

பெரியார் பாலாஜி, மும்பை விழித்தெழு இயக்க பன்னீர் செல்வம், எழுச்சிப் பேரவை வனிதா இளங்கோவன், மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர கைரே, மலையாண்டி நினைவு அறக்கட்டளை நிறுவனர் அமரன் உத்தமன், தாராவி கிளை அலி முகமது,பாண்டுப் தாசன், ஜோகேஷ்வரி தமிழினநேசன், சீத்தாகேம்ப் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்,

மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்

இறுதியில் கவிஞர் ஜெ. சுகுமாறன் நன்றி கூறினார்.

மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந. வசந்தகுமாரின் தாயார் இராமநாதபுரம் காளியம்மாள் நடராஜன் அவர்கள் 16.09.2022 அன்று இயற்கையெய்தியதை முன்னிட்டு கூட்ட துவக்கத்தில் இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்ட இறுதியில் தாராவி 90 அடி சாலையில் முன்னாள் மத்திய அமைச்சர், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா, எம்.பி. படத்தை அவமானம் செய்த தமிழ்செல்வன், எம்,எல்.ஏ (பா.ஜ.க) உள்ளிட்ட பாஜகவினர் செயலுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092571
Users Today : 10
Total Users : 92571
Views Today : 14
Total views : 410281
Who's Online : 0
Your IP Address : 3.137.173.168

Archives (முந்தைய செய்திகள்)