21 Aug 2020 3:15 pmFeatured

வருகின்ற 22-08-2020 சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6
மலேசியா நேரப்படி இரவு 8.30 மணியளவில் மகாகவி பாரதியார் மற்றும் பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்களைத் தொகுத்து மலேசிய சகோதரிகளான பண்ணிசைமணி டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி மற்றும் இன்னிசைவாணி கனிமொழி கோவிந்தசாமி ஆகியோர் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சி மன்றத்தின் புரவலரும் மேனாள் சுங்கத்துறைக் கண்காணிப்பாளருமான கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
மிருதங்க வித்வான் ஜே.ஜே.பிரதாப் சர்மா, வயலின் வித்வான் இசைக்கலைமணி கார்த்திகேயன் கணபதி, தம்புரா- செல்வி கலைமதி.ரமேஷ், தாளம்- செல்வி திவ்யாஸ்ரி ரமேஷ் ஆகியோர் இசைக் கருவிகளை மீட்ட இனிய தமிழ்ப் பாடல்களை மிக அழகாக பாடி தமிழுணர்வை ஊட்டுகின்ற சிறப்புமிகு நிகழ்வு ஸூம் செயலி மூலம் நடைபெறவுள்ளது.
மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரையாற்ற மன்றச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தொடக்கவுரை ஆற்றுகிறார். இறுதியில் மன்றப் பொருளாளர் அ.இரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றுகிறார்.
கடந்த திசம்பர் திங்கள் நேரடியாக மேடை நிகழ்ச்சியாக பாண்டூப் திருவள்ளுவர் மன்றக் கலையரங்கில் நடந்த இந்த நிகழ்வு தற்போது ஸூம் மூலம் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள், புரவலர்கள், ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் உலகெங்கும் உள்ள தமிழார்வலர்களும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
அனைத்துத் தமிழன்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி மன்ற நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.
நிகழ்வில் கலந்துகொள்ள
Zoom ID : 215 501 3891
Password : 231764






Users Today : 65
Total Users : 105934
Views Today : 103
Total views : 433519
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90