Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் வெள்ளிவிழா மாநாடு

06 Feb 2025 11:44 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures silver jubilee

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் வெள்ளிவிழா மாநாடு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை பாண்டுப் மேற்கு பிரைட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவுக்கு அழைப்பு

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் வதிலை பிரதாபன், பொதுச்செயலாளர் பேராசிரியர் அமலா ஸ்டேன்லி ஆட்சி மன்றக்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கவிமாமணி இரஜகை நிலவன், பொற்செல்வி கருணாநிதி, அந்தோணி ஜேம்ஸ், கு.மாரியப்பன், வே.சதானந்தன், வெங்கட் சுப்ரமணியன், எஸ்.பெருமாள்,

புரவலர்கள் அலிசேக் மீரான், சேதுராமன் சாத்தப்பன், கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், ஜேம்ஸ் தேவதாசன், மன்ற காப்பாளர் முனைவர் அ.சு இளங்கோவன்,

ஆலோசகர்கள் பாவலர் முகவை திருநாதன், வெ.பாலு, எஸ்.இராமதாஸ், வழக்கறிஞர் க. கணேசன், டி.என் முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாட்டு ஆலோசகர்கள் திரைப்பட இயக்குநர் முனைவர் யார் கண்ணன், பேராசிரியர் முனைவர் மு.பாலசுப்ரமணியன், பேராசிரியர் முனைவர் சு.முருகேசன் ஆகியோர் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிவிழா மாநாடு நிகழ்வுகள்

தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் வெள்ளிவிழா மாநாடு, கலை இலக்கியப் பொங்கல் பெருவிழா, வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா, வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா ஆகிய ஐம்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது. இந்த ஐம்பெரும் விழாவில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன.

வெள்ளிவிழா மாநாட்டுக்கு மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மாநாட்டு இயக்குநருமான பாவரசு வதிலை பிரதாபன் தலைமை தாங்கினார்.

தமிழ் திரைப்படக் கதை மற்றும் பாடலாசிரியரும், “ஏரிக்கரை பூங்காத்தே” புகழ் புலவர் சிதம்பரநாதன் மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் பட்டிமன்ற நடுவராக பங்கேற்றார்.

புதுக்கோட்டை ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி முனைவர் மு.பாலசுப்ரமணியன் மலர் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கினார்.

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் க.முருகேசன் மற்றும் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் முனைவர் மகா சுந்தர் அலிசேக் மீரான், கே.வி அசோக்குமார், புவனா வெங்கட்,, சாந்தாராம், ஜேம்ஸ் தேவதாசன், டாக்டர் எம்.வி வைத்திலிங்கம், முருகன் ராஜன், டாக்டர் நர்மதா, முருகன், பாவலர் நெல்லை பைந்தமிழ், கனக மணிகண்டன், காரை ரவீந்திரன், கதிரவன், மெஹபூப் பாஷா, சிவக்கொழுந்து, முத்தப்பா, ராமானுஜம், சமீர் அசன், சதாசிவம், அஞ்சாமை அறச்செல்வன் கதிரொளி, அப்துல் லத்தீப், முனாஃப் பாஷா, அசோக் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக சு.குமணராசன், கருவூர் இரா பழனிச்சாமி, பி.கிருஷ்ணன், பெ.கணேசன், செ.அப்பாத்துரை, அ.இளங்கோ, வசந்தகுமார், அ.இரவிச்சந்திரன், கவிஞர் வ.இரா தமிழ்நேசன், பிரான்சிஸ், முத்தமிழ் தண்டபாணி, ஆல்பர்ட், மாரிமுத்து, செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அமலா ஸ்டேன்லி அறிமுகவுரையாற்றினார்.

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற பொருளாளர் கு.மாரியப்பன் வரவேற்புரையாற்றினார்.

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள் ராணி சித்ரா, பிரவீனா சேகர், வாணிஸ்ரீ வேணுகோபால், செல்வி ராஜ் ஆகியோர் நெறியாள்கையை சிறப்பாகக் கையாண்டனர்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகக்குழுச் செயலாளர் வே.சதானந்தன் நன்றியுரை ஆற்றினார்.

மன்ற கலைப்பிரிவினரின் இன்னிசை நிகழ்ச்சி

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற கலைக்குழுவின் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைப்பிரிவு மன்ற ஒருங்கிணைப்பாளர் டி எம் எஸ் நரசிம்மன், ராணி சித்ரா, வாணிஸ்ரீ வேணுகோபால், மல்லிகா பன்னீர் செல்வம், ஏ ராஜூ, ஆர் மாரியப்பன் 'ஓதுவார் கவிஞர் கதிர்பாரதி ஆகியோர் பாடினார்கள்.

நாட்டியம்

செல்வி யாமினிஸ்ரீ குணசேகரன், மகாலெஷ்மி மற்றும் ஷைலி ஆகியோரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கருத்தரங்கம்

நண்பகல் 12.30 மணியளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க நிகழ்வுக்கு புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முனைவர் மு.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

தொல்காப்பியத்தில் நம் நெஞ்சை கவர்வது எது? என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அறிவியல் சிந்தனையே! என்று முனைவர் ச.பிரியா, அறவியல் சிந்தனையே!! என்று நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ், அகப்பொருள் சிந்தனையே!!! என்று முனைவர் கு.நாகம்மாள், புறப்பொருள் சிந்தனையே!!! என்று வழக்கறிஞர் சாக்ரடீசு கணேசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கவியரங்கம்

மதியம் 2.30 மணிக்கு ”தித்திக்கும் பொங்கல்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. சென்னையை சேர்ந்தவரும், திரைப்படக் கதை மற்றும் பாடலாசிரியரும், “ஏரிக்கரை பூங்காத்தே” புகழ் புலவர் சிதம்பரநாதன் அவர்கள் கவியரங்க நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், பாவரசு முகவை திருநாதன், பாவலர் நொச்சிப் பூந்தளிரன், முனைவர் சு.பாஸ்கர், முனைவர் கி.துர்காதேவி, கவிஞர் கதிர்பாரதி, முனைவர் தே.தேன்மொழி, முனைவர் அ.ரேவதி, முனைவர் நா.தனலட்சுமி, முனைவர் ஜி.வி பரமசிவம், கவிஞர் வெங்கட் சுப்ரமணியன், கவிஞர் கனிஸ்டா ரூபன், முனைவர் சு.சாந்தி, முனைவர் யு.துர்காதேவி, முனைவர் ம.இராணி, கவிஞர் செ.இரா.நர்மதாதேவி கவிபாடினார்கள்.

மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு

மன்ற நிர்வாகக் குழுச் செயலாளர் வே.சதானந்தன் ஒருங்கிப்பில் பாவலர் நெல்லை பைந்தமிழ், வெங்கட் சுப்பிரமணியன், பிரவீனா சேகர், சுந்தரி வெங்கட் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்திய சீர்வரிசை சண்முகராசனார் நினைவுக் கட்டுரைப்போட்டி மற்றும் பேராசிரியர் சமீரா மீரான் நினைவுப் பேச்சுப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மலர்வெளியீடு

பட்டிமன்றம்

அன்று மாலை 6 மணியளவில் “ஊடக வளர்ச்சியால் இன்றைய சமூகம் வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா?” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்ற நடுவராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் கலந்து கொண்டார்.

வளர்ந்திருக்கிறது என்று அணித் தலைவர் முனைவர் மகா சுந்தர், பிரவீனா சேகர், கவிஞர் பாண்டித்துரை ஆகியோரும்,

தளர்ந்திருக்கிறது என்று அணித் தலைவர் கி.வேங்கடராமன், செந்தமிழ் கதிரொளி சுந்தரி வெங்கட், கவிஞர் பாபு சசிதரன், வே.சதானந்தன் ஆகியோரும் வாதிட்டனர்.

நடுவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் ”ஊடகங்களால் சமுதாயத்திற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. இளைய சமுதாயத்திற்கு ஊடகத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்லி அவர்களை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது எனது தீர்ப்பாக அல்ல எனது கருத்தாக சொல்லி நிறைவு செய்கிறேன்.” என்று கூறினார்.

விருதுகள்

வெள்ளி விழா மாநாட்டு விருதுகள்

திரைத்துறைப் பாடலாசிரியர் புலவர் சிதம்பரநாதன் அவர்களுக்கு திருக்குறள் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலன் விருது, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. முருகேசன் அவர்களுக்கு இளங்கோவடிகள் விருது, சென்னை இராணிமேரி கல்லூரித் தமிழத்துறைப் பேராசிரியர் முனைவர் கே.இரா. கமலா முருகன் அவர்களுக்கு டாக்டர் மு.வரதாராசனார் விருது என வழங்கப்பட்டன.

வெள்ளி நிலா விருதுகள்
நிகழ்வின் சிறப்பிற்கும் அமைப்பின் பெருமைக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றவர்களுக்கு வழங்கப்பட்டன.
மலர்க் குழுத்தலைவருமான ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர்
முனைவர் மு.பாலசுப்பிரமணியன்,
மலர்க்குழு ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கணேசன்,
துணை ஒருங்கிணைப்பாளர்கள்
கவிஞர் சேதுமணி அனந்தா,
ஞானம்,
சிவக்குமார் சுந்தர்ராஜ்
ஆகியயோரின் பணிகளை பாராட்டும் வண்ணம் வெள்ளி நிலா விருதுகள் வழங்கப்பட்டன.

வெள்ளிவிழா மாநாட்டு மலரில் படைப்புகளை வழங்கியவர்களும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்கின்ற சீர்மிகு பணிகளைப் பாராட்டி ஊக்கமூட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

கட்டுரையாளர்களுக்கான விருதுகள்
கவிஞர் அரியக்குடி மெய்யப்பனுக்கு அகநானூறு விருது,
முனைவர் கி.துர்காதேவிக்கு நற்றிணை விருது,
முனைவர் சு.பாஸ்கருக்கு குறுந்தொகை விருது,
முனைவர் பன்னிருகை வடிவேலனுக்கு ஐங்குறு நூறு விருது,
முனைவர் செ.மார்கண்டனுக்கு பதிற்றுப் பத்து விருது,
முனைவர் தே.தேன்மொழிக்கு பரிபாடல் விருது,
முனைவர் யு.துர்காதேவிக்கு கலித்தொகை விருது,
முனைவர் சு.சாந்திக்கு திருமுருகாற்றுப் படை விருது,
முனைவர் கு.நாகம்மாளுக்கு பெரும் பாணாற்றுப்படை விருது,
கவிஞர் பிரவினா சேகருக்கு குறிஞ்சிப்பாட்டு விருது,
முனைவர் நா.தீபா ராணிக்கு மலைபடுகடாம் விருது,
முனைவர் ச.பிரியாவுக்கு தொல்காப்பியத் துளிகள் விருது,
முனைவர் நா.தனலெட்சுமிக்கு முப்பால் விருது
எனப் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

கவிஞர்களுக்கான விருதுகள்
பாவரசு முகவை திருநாதன் அவர்களுக்கு சிந்தனை பாவலர் விருது,
கவிஞர் சுரேஷ் எலியாஸுக்கு கவிதைக் கனல் விருது,
கவிஞர் பாண்டித்துரைக்கு கவிமுகில் விருது,
கவிஞர் கதிர்பாரதிக்கு கவிச்சுடர் விருது,
முனைவர் ஜி.வி பரமசிவத்திற்கு கவிமுரசு விருது,
கவிஞர் கா.பாபுசசிதரனுக்கு கவிஞாயிறு விருது,
கவிஞர் கனிஸ்டா ரூபனுக்கு கவிக்கதிர் விருது,
பாவலர் நொச்சிப் பூந்தளிரனுக்கு கவியருவி விருது,
கவிஞர் சுரேஷ் கண்ணனுக்கு சிந்தனைக் கவிஞர் விருது,
கவிஞர் டி.தனசேகரனுக்கு தத்துவப் பாவலர் விருது,
முனைவர் ம.வி வைத்திலிங்கத்திற்கு கவித்தென்றல் விருது,
கவிஞர் மகா சுந்தருக்கு மரபுச் சுடரொளி விருதும் வழங்கப்பட்டன.

சிறுகதை மற்றும் நவீன இலக்கிய விருதுகள்

சிறுகதைச் சுடர் விருதுகள்
வே.சதானந்தன்,
கவிஞர் திலகராணி,
செல்வி ராஜ்,
வாணிஸ்ரீ வேணுகோபால்,
திருமதி பாரதி கணேசன்
ஆகியோருக்கு சிறுகதைச் சுடர் விருது வழங்கப்பட்டன.

இலக்கியச் சுடர் விருதுகள்
கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன்,
ராணி சித்ரா
ஆகியோருக்கு இலக்கியச் சுடர் விருதுகள் வழங்கப்பட்டன.

மும்பை பிரபலங்களும்,தமிழ் ஆர்வலர்களும், மன்ற உறுப்பினர்களும் விழாவில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மன்ற நிர்வாகக் குழுச் செயலாளர் வே.சதானந்தன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

You already voted!
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Mustaq ali
Mustaq ali
5 months ago

அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை அருமை வாழ்த்துக்கள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102635
Users Today : 2
Total Users : 102635
Views Today : 2
Total views : 428068
Who's Online : 0
Your IP Address : 18.97.14.82

Archives (முந்தைய செய்திகள்)