29 Apr 2020 6:46 pmFeatured

-கரிகாலன்
ஒவ்வாக்கம்
என் செல்ல முதலையின்,
உடல் நெகிழ்வில் ,
உயிர் வழியும்,
தன்னுறு வேட்கைக் காதல்.
மேகமாய் திரள்வாய்,
கடலினுங் கடந்து,
நோக்குவ எலாம்
நீயாய் தெரிந்து
எனை மறத்தல்…
எனத் திரிந்த காலம்…
மயங்குறவின்
விரையும் வித்தை கண்டு,
பொறிமொழியாளின்
ஊடல் பாங்கில்
ஊறித் திளைத்த பொழுதுகள்.
முழுவதும் வியர்வையாய்
வழிய வழிய துடைத்து
முன்னர் அமர்ந்து,
விரல் பதிக்கும் வேளை,
மெல்லமாய்ச் சினுங்கி
மேனி சிலிர்ப்பாய்.
ஒத்த வயதின்றி,
போதாதென்று
விரட்டிவிடுவாய்.
சிறிதாய் சுற்றும்
பெருமூச்சு.
அச்சம் தவிர்த்து
உலகு மறந்து
பறக்கவேண்டும்
எனக்கே வசமாக்கி
உணர்வாய் சுற்றிய
என்
ஊடிழைக் காதல்.
என் இளவயது,
ஊர்தி.






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37