Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நெருலில் பத்லாபூர் திருப்புகழ் குழுவினரின் இசை நிகழ்ச்சி

25 Jul 2026 4:38 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures thirupugazh

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பத்லாபூர் திருப்புகழ் குழு சார்பில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களை கர்நாடக இசை ராகங்களில் பாடி, உலக நன்மை, உடல்நலம்,மகிழ்ச்சி மற்றும் அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி வருகிற ஜூலை 29 (புதன்கிழமை) மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை, நவி மும்பை நெருல் கிழக்கில், செக்டார்-29, பெஸ்ட் பேருந்து நிலையம் அருகிலுள்ள பக்த சமாஜ் நெருல் முருகன் கோவிலில் நடைபெறுகிறது.

திருமுருகப் பெருமான் மற்றும் வேதவியாச மகரிஷியின் அருளையும் ஆசியையும் பெறும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து முருக பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு பத்லாபூர் திருப்புகழ் குழு அழைப்பு விடுத்துள்ளது.

குரு பூர்ணிமா தினம் மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பகவதம் மற்றும் 18 புராணங்களை இயற்றிய வேதவியாச மகரிஷியை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், புத்த மதம் மற்றும் ஜைன மதத்தினரும் இந்நாளை சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றனர் இந்நாளில் மாணவர்கள் தங்கள் குருமார்களை வணங்கி, அவர்களின் ஆசியைப் பெற்று கல்விப் பயணத்தை தொடரும் உறுதியை வெளிப்படுத்துவது வழக்கமாகும்.

இந்த நிகழ்ச்சி பத்லாபூர் திருப்புகழ் குழுவின் 89-வது இசை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது

மேலும் தகவல்களுக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. வெங்கடரமணி (செல் 99943 75418) என்பவரை தொடர்புகொள்ளலாம்.

You already voted!
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Jheeva
Jheeva
1 month ago

First time spritual information

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

119838
Users Today : 23
Total Users : 119838
Views Today : 31
Total views : 451138
Who's Online : 0
Your IP Address : 216.73.217.63

Archives (முந்தைய செய்திகள்)