Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கட்டணமில்லா அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

07 Aug 2025 12:57 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures-hrced

தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருவதோடு, ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

2025 - 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது http://www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்

1. அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
2. அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும். 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
3. வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
4. அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவரின் சான்று பெற்று இணைத்தல் வேண்டும்.
5. அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
6. அறுபடைவீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகள் அழைத்துவர அனுமதி இல்லை.
7. ஆதார்கார்டு அல்லது நிரந்தரக்கணக்கு எண் (Pan card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் உரிய தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் சமர்ப்பிக்கலாம்.
9. மேலும் விண்ணப்பங்கள் கொள்ளலாம் (hrce.tn.gov.in) இத்துறை வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து
10. ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் 2.00.000/- மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான உரிய வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
11. பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்துகொள்ள முடியும்

விண்ணப்ப படிவம்

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104910
Users Today : 2
Total Users : 104910
Views Today : 2
Total views : 432070
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)