03 Feb 2023 10:24 amFeatured

மும்பை மண்ணில் திராவிட இயக்க உணர்வோடு கழகப் பெருமை பேசி மொழியின உணர்வூட்டும் பணியை சிறப்பாக செய்து வருகிற மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞரின் நினைவுநாளை மும்பையில் முலுண்டு பகுதியில் ஏற்பாடு செய்துள்ளது.
புறநகர் திமுகழக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் முலுண்டு மேற்கில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் வைத்து (வாணி வித்யாலயா பள்ளிக்கு அருகில்) நடைபெறவுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் திறந்து வைக்கிறார்.
புறநகர் மாநிலத் தி.மு.கழக செயலாளர் அலிசேக் மீரான், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச்செயலாளர்கள் முனைவர் வதிலை பிரதாபன், அ.இளங்கோ,கணேசன்,ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்
இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் சிறப்புரை ஆற்றுகிறார். இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், துணை அமைப்பாளர் ஜைநுலாபுதீன், இளைஞரணித் துணை அமைப்பாளர் இரா.கணேசன்,சோ.பா.குமரேசன்,முகமது அலி ஜின்னா, டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை.சோ.பாபு, பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெஹபூப் பாஷா மற்றும் கவிஞர் வீரமணி ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றுகிறார்கள்.
உணர்வுமிகு கழக அன்பர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேரறிஞரின் புகழ்பாட மும்பை புறநகர் மாநில திமுகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37