18 Mar 2020 12:45 amFeatured

இந்தியாவில் இதுவரை 115 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 40 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கஸ்தூரிபா மருத்துவமனையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில், மகாராஷ்டிரா அரசு புதிய வழியை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள், நாடுகளில் இருந்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் மக்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் இடது கைகளில் அரசின் முத்திரை குத்தப்படும்.
மேலும், மக்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் மின்னஞ்சல் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு ஒருவாரத்தில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 39 பேரில் பெரும்பாலானோர் அபுதாபி, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவையை நிறுத்துவது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150