24 Jun 2019 9:56 amFeatured

கோலாலம்பூர்-23 முத்தமிழ்ப் படிப்பகத்தின் 61வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மீண்டும் தலைவராக பெ ராமன் தேர்வு
முத்தமிழ்ப் படிப்பகத்தின் 61வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்தது. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட குறிப்பு, செயலறிக்கை, கணக்கறிக்கை முறையாக தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. படிப்பகத்தின் அறிவுரையாளர்களான கவிஞர் பாதாசன் மற்றும் திருமதி மு. சாந்த குமாரி இடைக்கால தலைவர்களாக இருந்து புதிய செயலவை தேர்தலை நடத்தி வைத்தார்கள். அதில் திரு. பெ. ராமன் மீண்டும் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். திரு. பொ. ஸ்ரீ தரன் துணைத் தலைவராகவும், விலயா மணியம் செயலாளராகவும், செல்வி. ராம. சரஸ்வதி துணைச்செயலாளராகவும், திரு, ச. பாலசுப்பிரமணியம் பொருளாரகவும் மேலும் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிக நாட்கள் படிப்பகம் வந்தோர், அதிக நூல்களை படித்தோர், நூலகத்திலிருந்து அதிக நூல்களை வாங்கிச் சென்று படித்தவர்கள் ஆகியோருக்கு படிப்பக தலைவர் பெ ராமன் நூல்களை பரிசாக வழங்கினார். புதிய செயலவையினர் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.






Users Today : 2
Total Users : 106612
Views Today : 2
Total views : 434361
Who's Online : 1
Your IP Address : 216.73.216.1