06 May 2025 12:11 amFeatured
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கவராதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகளை கொல்லப்பட்டனர்.. இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதனால் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் 7 ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகையை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பின்னணி என்ன? எப்படி நடக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பிரதமருடன் முப்படையின் தளபதிகள் அடுத்தடுத்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முப்படைகளும் போர் பயிற்சிகளை தொடங்கி உள்ளன. அதோடு பாகிஸ்தான் - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தான் ஒன்றிய அரசு சார்பில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வரும் 7 ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது
வான்வெளி தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புவது சரியாக வேலை செய்கிறதா? என்பதை சோதித்து பார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கிராஷ் பிளாக் அஷட் நடைமுறை பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். அவசரகால மீட்பு திட்டங்கள் தொடர்பான ஒத்திகைகளை மேற்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் விரைவான, ஒருங்கிணைந்த செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை என்பது இருக்க வேண்டும்.
மின்தடையை சமாளிப்பது தொடர்பாக மக்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல் முக்கிய உள்கட்டமைப்புகளை மறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த போர் ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த பயிற்சி ஒரு எதிரியால் நிகழக்கூடிய தாக்குதலுக்கு நேரடியாக தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதில் பின்வரும் நடவடிக்கைகள் இடம் பெறும்:
பொதுவாக போர்க்கால ஒத்திகை என்பது இருநாடுகள் இடையேயான மோதல் மோசமாகும் போது அரசு சார்பில் வெளியிடப்படும் அறிவிப்பாகும். இதன் முக்கிய நோக்கம் என்பது போர் ஏற்படும்போது எதிரி நாடு நம்மை தாக்கலாம். இப்படியான தாக்குதலில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும். அதற்கு மக்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வு என்பது வேண்டும். இதனை வழங்குவதற்காக தான் மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள வேண்டும் என்பது உத்தரவிட்டுள்ளது.
நிச்சயம் பதிலடி கொடுப்போம். எதிர்த்து தாக்கினால் போர் புரியவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
இதனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒத்திகை நாட்டின் பாதுகாப்புத் துறையின் தயார்நிலை மற்றும் அவசரகால நடவடிக்கைகளின் நடைமுறை திறனை மதிப்பீடு செய்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.