01 Dec 2023 1:04 amFeatured

மும்பைத் தமிழ்ச் சங்கம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம்-சென்னை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா (பாரதி உலா-2023) சயானில் உள்ள மும்பை தமிழ்ச் சங்க குளிர் அரங்கத்தில் வைத்து 03.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான யார் கண்ணன் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து செம்பூர் ஹரி மற்றும் கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொள்ளும் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மும்பை தமிழ் சங்கத்தின் தலைவர் எஸ்.ராமதாஸ் தலைமையுரையாற்றுகிறார்.
பாரதியின் கவிதைகளில்… என்ற தலைப்பில் நடைபெறும் பேச்சரங்கில் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு மொழிச் சிந்தனை என்ற தலைப்பில் தீபிகா செல்வராஜ், நாட்டுச் சிந்தனை என்ற தலைப்பில் கவின்ராஜ் கோவிந்த்ராஜ், சமூகச் சிந்தனை என்ற தலைப்பில் பி ஷோபனா ஸ்ரீ ஆகியோர் பேசுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து யாமினி ஸ்ரீ குணசேகரனின் நடனம் நடைபெறுகிறது.
மாணவ மாணவிகளுக்கு முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் பரிசளித்து வாழ்த்துரை வழங்குகிறார்
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம் என்ற தலைப்பில் பிரவீனா சேகரும் சிறுமை கண்டு பொங்குவாய் என்ற தலைப்பில் செல்வி ராஜும் ஆணும் பெண்ணும் நிகர் எனக்கொள்வோம் என்ற தலைப்பில் சுந்தரி வெங்கட்டும் எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஓரினம் என்ற தலைப்பில் ஹரிஹரனும் பேசுகின்றனர்.
மருத்துவர் சி இராமசாமி பரிசளித்து வாழ்த்துரை வழங்குகிறார்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில்
இன்றைய காலகட்டத்தில் ”பாரதி கண்ட கனவுகள் நிறைவேறியதா கானல் நீரானதா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
நிறைவேறியது என்ற தலைப்பில் வ.ரா தமிழ் நேசன், ராணி சித்ரா மற்றும் கானல் நீரானது என்ற தலைப்பில் புவனா வெங்கட், முருகன் ஆகியோர் வாதிடுகின்றனர்.
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் யார் கண்ணன் பரிசளித்து சிறப்புரையாற்றுகிறார்.
உரத்த சிந்தனையின் பொதுச் செயலாளர் உதயம் ராம் தொகுப்புரை மற்றும் நன்றியுரையாற்றுகிறார்.






Users Today : 62
Total Users : 105931
Views Today : 97
Total views : 433513
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
It is an opportunity for all Diaspora Mumbai Tamil people to know about BHARATHIAR a revolutionary philosophical, socialistic, literary scholars, thinker, freedom fighter against imperialism through eminent, assiduous Tamil scholars. Thanks to the organizers.