09 Nov 2019 1:20 amFeatured

அயோத்தி வழக்கில் 09.11.2019 காலை10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர். இதன் மீதான விசாரணை நடந்து வந்தது
அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.
அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது.
ஸ்ரீ ரவிசங்கரின், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அனைத்து தரப்பும் தினமும் வாதங்களை வைத்தனர். விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
இன்று(09.11.2019) காலை 1030க்கே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளனர். தீர்ப்பை அடுத்து நாடு முழுக்க உச்சகட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீர்ப்பையொட்டி, உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் கொண்டாட்டங்கள் மற்றும் துக்கம் அனுசரிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150