03 Feb 2020 11:03 pmFeatured

பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு மும்பை புறநகர் மாநில திமுக சார்பில் பல்வேறு கிளைகளின் சார்பில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
கல்யாணில் பேரறிஞர் அண்ணாவின் 51 வது நினைவு நாள் நிகழ்வு
கல்யாண்-விட்டல்வாடி-மேற்கில் உள்ள உத்யோக் விகார் பணிமனையில் இன்று காலை மும்பை புறநகர் திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 51 வது நினைவு தினம் நடைபெற்றது

இந்த நிகழ்வில் இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், கல்யாண் தமிழ் நற்பணி மன்றத் தலைவர் ஆ.பரமசிவம், துணைச் செயலாளர் ரெங்கன் என்ற இரகுநாத பெருமாள், விட்டல்வாடி ஆர்.பி.ஐ நிர்வாகி மிலிந்த், கார்த்திக், மதிவாணன், லட்சுமணன், பவன்குமார், உச்சிமகாளி மற்றும் மாஸ்டர் பெரியசாமி உள்ளிட்டோர் பேரறிஞர் அண்ணா உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஏனைய கல்யாண் கிளைக்கழக உறுப்பினர்கள் மற்றும் நிகழ்வினை அறிந்த உத்யோக் விகாரை சார்ந்த சில பணியாளர்களும் வந்து மலரஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிவண்டி கிளையின் சார்பாக

திமுக நிறுவன தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி மும்பை புறநகர் திமுக பிவண்டி கிளையின் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு கிளை செயலாளர் மெகபூப்பாஷா சேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்த குமார் இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. கணேசன், பேராசிரியர் சம்பத், முஸ்தாக் அலி, செந்தில்குமார், தியாகராஜன் மற்றும் கிளைக் கழக தோழர்கள் பலர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
கோரேகாவ் கிளை சார்பாக

கோரேகாவ் கிளை சார்பாக இலக்கிய அணி புரவலர் சோ.ப.குமரேசன் தலைமையில் அண்ணா நினைவு அஞ்சலி நிகழ்வில் கிளைக் கழக தோழர்கள் கலந்து கோண்டு பேரறிஞர் அண்ணா திருஉருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்
ஜெர்மரி கிளைக்கழகத்தின் சார்பாக

ஜெர்மரி கிளைக்கழகத்தின் சார்பாக மும்பை புறநகர் திமுக துணைச்செயலாளர் அ.இளங்கோ அவர்கள் தலைமையில் அண்ணா நினைவு அஞ்சலி நிகழ்வில் இலக்கிய அணி அமைப்பாளர் வ.இரா.தமிழ் நேசன் மற்றும் கிளைக் கழகத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கோண்டு பேரறிஞர் அண்ணா திருஉருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்
தானே மற்றும் முலுண்ட் கிளை

பேரறிஞர் அண்ணாவின் 51 வது நினைவு நாள் கூட்டம் தானே மற்றும் முலுண்ட் கிளை இணைந்து தானே கிளை செயலாளர் ஆ.பாலமுருகன் அவர்களின் இல்லத்தில் வைத்து நடந்த நினைவு நாள் கூட்டத்தில் தானே கிளை செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் கிளை செயலாளர் சு.பெருமாள், முலுண்ட் இளைஞரணி அமைப்பாளர் பால உதயகுமார், ம.அப்துல் லத்தீப், இ. மாடசாமி, வள்ளியூர் மணி, , முலுண்ட் இளைஞரணி உ.சங்கரசுப்பு மற்றும் முத்துக்குமார் கலந்து கொண்டனர்
ஜோகேஸ்வரி கிளை சார்பாக

ஜோகேஸ்வரி கிளை சார்பாக கிளைக் கழகச் செயலாளர் டிம்லேசன் தலைமையில் அண்ணா நினைவு அஞ்சலி நிகழ்வில் கிளைக் கழக தோழர்கள் கலந்து கோண்டு பேரறிஞர் அண்ணா திருஉருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்






Users Today : 15
Total Users : 108828
Views Today : 15
Total views : 436864
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150