17 Apr 2025 1:25 amFeatured
தூத்துக்குடி ராம லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது
தூத்துக்குடி: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் இரத்த தான முகாம் ராம லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் துணை நிர்வாகச் செயலாளர் சுரேஷ்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் அறக்கட்டளை தலைவர் I விஜயராஜன் IRS அவர்கள் தலைமை வகித்தார்கள் நவராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
அண்ணலின் திருவுருவப்படத்தை வ உ சி கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் பால்ராஜ் அவர்கள் திறந்து வைத்தார் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சிவகுமார் அவர்கள் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் IPS அவர்கள் இரத்த தானம் வழங்கிய அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
தூத்துக்குடி காமராஜ் கலை வணிக நிர்வாகத்துறை பேராசிரியர் டாக்டர் கருப்பசாமி, தூத்துக்குடி காவல்துறை உதவி ஆய்வாளர் வேல்ராஜ் , புதுக்கோட்டை துளசி மருத்துவமனை டாக்டர் ராஜன் நந்தமிழர் தொழிலாளர் நல சங்க பொருளாளர் ஸ்டீபன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விழாவின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் மா.அ.ராசன் BBA.,B.A. LL.B., அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இனிதே ரத்ததான முகாம் நிறைவு பெற்றது
முகாமை : இளைய வேந்தன் அறக்கட்டளை நிர்வாகி திரு ஷேக் திரு முத்தரசன் ரட்சனியா செங்குருதி திரு டேவிஸ் பா கோகுல் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாணிக்கபுரம் டாக்டர் அம்பேத்கர் இளைஞரணி மற்றும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் திரு மதிவாணன் ,
செல்வின் , மற்றும் ஜெயகீதன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர் 100 கும் மேற்பட்ட நபர்கள் முகாமில் இரத்தம் வழங்கினார்கள்