Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மீம்ஸ் சிரிப்பின் பின்னால்.. வலி நிறைந்த சிறுவன்?

12 Apr 2026 4:50 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures meme boy

சோசியல் மீடியாவில் நீங்கள் தினமும் மீம்ஸ் பார்த்து சிரிப்பவரா அப்படியானால் உங்கள் கண்ணில் படுகிற பல மீம்ஸ்களிலும் காமெடி வீடியோக்களிலும், ஒரு டீன் ஏஜ் இளைஞன் டீ கப்பை கை கையில் பிடித்தபடி குபீரென சிரிப்பதும் பின்னர் டீ கையில் சிந்தி சூட்டினால் கையை உதறுவது போன்றும் ஒரு காட்சி அடிக்கடி வரும் அந்த வீடியோவை பார்த்து நாமும் அவனுடன் சிரித்து கடந்து போயிருப்போம். ஆனால் அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை கதையை தெரிந்தால், கொஞ்சம் நெஞ்சே கனக்கும்.

சோசியல் மீடியா பிரபலம்

அந்த வீடியோவில் வரும் அந்த இளைஞனின் நிஜ பேர் அருண்குமார். தெலுங்கானாவை சேர்ந்தவர். இப்போ சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கானவர்களை சிரிக்க வைக்குற ஒரு முகமா மாறி இருக்கிறார். ஆனால் இந்த பிரபலத்துக்கு பின்னால், ஒரு சாதாரண கிராமத்து பையனோட கஷ்டமான வாழ்க்கை மறைந்து இருக்கிறது.

வாழ்க்கையை மாற்றிய லாரி டிரைவர்

அந்த வைரலான புன்னகைக்குப் பின்னால் ஒரு கடினமான குழந்தைப் பருவம் இருந்தது. அருண்குமார் படித்தது நான்காம் வகுப்பு வரைக்கும் தான்.
குடும்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால், அருண் மிகச் சிறிய வயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி நேரு என்கின்ற ஒரு லாரி டிரைவரிடம் கிளீனர் வேலைக்கு போயிருக்கிறார். அப்பொழுது டிரைவர் நேரு, "படிப்பு தான் வாழ்க்கைக்கு அடிப்படை" என்று சொல்லி, அருண்குமாரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்.

அருண்குமார் தான் முதலில் "வேண்டாம்" என்றுதான் சொன்னாராம். ஆனால் நேரு பிடிவாதமாக, "படிக்கணும்" என்று சொல்லி, புத்தகங்களை வாங்தித்தந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்திருக்கார். அந்த ஒரு மனிதர் காட்டிய அக்கறை தான், இன்றைக்கு அருண்குமாருக்கு வாழ்க்கையில பெரிய திருப்புமுனையாக மாறி இருக்கிறது. "அன்று அவர் படிக்க வத்தது தான், இன்று எனக்கு தைரியமா யூடியூப் சேனல் தொடங்குற அளவுக்கு தன்னம்பிக்கை தந்துச்சு" என்று அருண்குமார் ஒரு பேட்டியில் உருக்கமாக சொல்கிறார்.

வைரல் வீடியோ பின்னணி

தேநீர் இடைவேளையின் போது அவரது முதலாளியான லாரி ஓட்டுநர் நேரு ஒரு பயணத்தில் ஓய்வெடுக்கும் போது சொல்லிய ஒரு ஜோக்குக்கு அருண் குமார் சிரிக்கும் 15 வினாடி வீடியோவை அவர் சிரித்ததை அவர் சாதாரண ஒரு தருணத்தில் அவர் வெளியிட்டார்.  சமூக ஊடகங்களில் வெளியான பிறகு அருணின் மகிழ்ச்சியான சிரிப்பு விரைவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது மகிழ்ச்சியின் இயல்பான வெளிப்பாடு ஆன்லைனில் பரவலாகப் பரவி, விரைவில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட சிரிப்பு மீம்களில் ஒன்றாக மாறியது. மில்லியன் கணக்கானவர்கள் கிளிப்பைப் பார்த்து அந்த தருணத்தை ரசித்தனர், ஆனால் வீடியோவில் உள்ள சிறுவனின் பின்னணியில் உள்ள கதையை மிகச் சிலரே அறிந்திருந்தனர்.

லாரி டிரைவர் ஒரு நாள் சொல்லிய ஒரு ஜோக்குக்கு, அருண்குமார் சிரித்த அந்த இயல்பான சிரிப்பை வீடியோவாக பதிவு செய்து, அதை சோசியல் மீடியாவில் போட்டதுதான் இன்றைக்கு மீம்ஸ்களாக, ரீல்ஸ்களாக உலகம் முழுக்க பரவி இருக்கிறது. அந்த சிரிப்பு இப்பொழுது பலருக்கு 'ரியாக்ஷன் வீடியோ' வாக மாறி, கோடிக்கணக்கான பேரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அன்று அவன் வீடியோவை பார்த்து பலர் கமெண்ட் செய்வதை வாசிக்கக்கூட தெரியாதவனாகத்தான் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே அவனை படிக்க வைக்கவேண்டும் என்று டிரைவர் நேரு முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்

மாறிய வாழ்க்கை

இன்றைக்கு அருண்குமார் தெலுங்கு சோசியல் மீடியாவில் ஒரு பிரபல முகம். மில்லியன் கணக்கான பேர் அவரை பின்தொடர்கிறார்கள். அடிக்கடி மீம்ஸ் வீடியோக்கள், காமெடி கண்டெண்ட் போட்டு வர்றார். சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் கெஸ்ட் ஆக கூப்பிடப்படுகிற அளவுக்கு, அவரோட வாழ்க்கை முழுக்க மாறி இருக்கிறது. ஆனால் இந்த எல்லா வெளிச்சத்துக்குப் பின்னாலும், ஒருகாலத்தில் லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையனோட வலி, வறுமை, போராட்டம் எல்லாம் மறைத்துதான் இருக்கு.
நாம் சிரித்து கடந்து போகின்ற அந்த ஒரு வீடியோ, ஒருவனுடைய வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனை என்று நினைத்தால், சோசியல் மீடியா சில நேரங்களில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதையும் புரிந்துகொள்ள இயலும்.

இதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஒல்வொரு சிரிப்புக்குப் பின்னால் எல்லாருக்கும் சந்தோஷம் தான் இருக்குமென்று அல்ல. சில சிரிப்புகள், சிலருடைய வாழ்க்கையோட சுமையைக் கூட மறைத்து வைத்திருக்கலாம் அதே நேரத்தில் சோசியல் மீடியா சிலருடைய வாழ்க்கையும் எந்த அளவிற்கு மாற்றியிருக்கிறது என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

112402
Users Today : 21
Total Users : 112402
Views Today : 24
Total views : 441138
Who's Online : 7
Your IP Address : 216.73.216.208

Archives (முந்தைய செய்திகள்)