16 Apr 2025 10:05 amFeatured

13.04.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு டோம்பிவிலி மேற்கிலுள்ள ஜோந்தலே பள்ளியில் வைத்து தென்னரசு மின்னிதழின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது

விழாவுக்கு தென்னரசு மின்னிதழின் சிறப்பாசிரியரும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான பாவரசு வதிலை பிரதாபன் தலைமை தாங்கினார்
மொழி வாழ்த்து இசைத்து தொடங்கிய விழாவில் தென்னரசு மின்னிதழின் துணை ஆசிரியர் வெங்கட் சுப்ரமணியன் வரவேற்புரையாற்ற, முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் மகிழ்வுரையும் நன்றியுரையுமாற்றினார்
வாழ்த்துரை
சவுத் இந்தியன் அசோசியேஷன் மேனாள் தலைவர் டி.என்.முத்துகிருஷ்ணன் தெ.ஆ.தி.ம.சங்க மேனாள் தலைவர் கே.வி.அசோக்குமார், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் இரஜகை நிலவன், பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன், மராத்திய மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாக்ரடீஸ் கணேசன், தென்னரசு விளம்பரப் பிரிவு பொறுப்பாளர் வீரை சோ பாபு, டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கத் தலைவர் வெ.இராஜேந்திரன், தமிழின ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் தி.அப்பாதுரை, அம்பர்நாத் முத்தமிழ் மன்றச் செயலாளர் முத்தமிழ் தண்டபாணி,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
வாழ்த்துச் செய்தி
திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தக்குமார் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலையால் அவர் அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியினை தென்னரசு துணை ஆசிரியர் வெங்கட் சுப்ரமணியன் வாசித்தார்
முன்னிலை
கல்யாண் தமிழ் நற்பணி மன்றப் பொருளாளர் க.ஜீவானந்தம் தமிழ் அறம் செய்திகள் ஆசிரியர் தமிழ் அறம் ராமர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்கள்
ஜெ ராஜா, எல்.என் ஹரிஹரன், ஆர் டி ராஜன், கோபால் (LIC), முஷ்டாக் அலி, சோ.வேல்முருகன், அருணாச்சலம், அ.வேலையா, L.இரமேஷ் பாபு, அனந்த ரமேஷ். பொன்னையா, எம். அசோக்குமார், எஸ்.சாமி , சிந்து (தினகரன்), இ.பெருமாள் , ரகுநாத பெருமாள், ச. சுரேஷ், தமிழரசன், சூரியநாராயணன், இ முத்து, உ. சுரேஷ், லலிதா பர்குரு, புவனேஸ்வரி, என்.இரத்தினம், பவானி, உமா சுந்தர், ஜெ.கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
பட்டிமன்றம்
பாவலர் நெல்லை பைந்தமிழ் தலைமையில் இன்றைய வாழ்வியல் முறையால் உறவுகள் வளர்ந்துள்ளனவா? தளர்ந்துள்ளனவா? என்றத் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது

வளர்ந்துள்ளன என்ற தலைப்பில் அணித்தலைவர் கவிஞர் வெங்கட் சுப்ரமணியன், கி,வெங்கடேஷ்,, ஜீனத் நஃபீலா ஆகியோரும்
தளர்ந்துள்ளன என்ற தலைப்பில் அணித்தலைவர் வே.சதானந்தன், தி.சூரியநாராயணன், சுதா ராமர் ஆகியோரும் சிறப்பாக வாதிட்டனர்
முந்தைய காலங்களை ஒப்பிடுகையில் இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் உறவுகள் தளர்ந்துள்ளன என்பது நடுவர் தீர்ப்பாக அமைந்தது
இந்நிகழ்வில் கவிஞர் இரஜகை நிலவனின் ”உறவின் மாறாட்டம்” என்கின்ற சிறுகதை தொகுப்பு நூலை டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கச் செயலாளர் ஜெ.ராஜா வெளியிட தெ.இ.ஆ.தி.ம.சங்க மேனாள் தலைவர் கே.வி.அசோக்குமார் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.


ராஜ்கிஷோர், என்.பாலசுந்தரம்,வெ.கணேசன்,என்.கே பாலசுப்ரமணியன், இரா. கோபாலகிருஷ்ணன், ஜெ.கல்யாணராமன், மகேந்திரன் (இதயம் அறக்கட்டளை, ஜெஸ்டின்,மும்பை கதிரவன் ,ந. தமிழரசன், கே.பத்மா, சாந்தி சுப்ரமணியன், உமாசுந்தர், சுந்தர கிருஷ்ணன், புவனேஷ்வரி, ஆர். பவானி ரூபன், கிரிஜா விஸ்வனாதன், தனலக்ஷ்மி நாராயணன், குமார், சித்ரா குமார், எஸ்.சாமி, இசக்கிமுத்து, கே. சுகுமார்,

வி, செல்வராமன், சி.பி.வாஞ்சீஸ்வரன், ஆர். சௌமியா, எம்.ஈ.முத்து, லலிதா, லாரான்ஸ் ரூபன், சாந்தி சதானந்தன், நித்யா சதானந்தன் உள்ளிட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தென்னரசு வாசகர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






Users Today : 25
Total Users : 106606
Views Today : 29
Total views : 434354
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்