11 Dec 2023 12:41 amFeatured

S.D.சுந்தரேசன், I.A.S (அரசுச் செயலர், அருணாச்சலப்பிரதேசம்)
(6) சிவில் சர்விஸ் தேர்வு போட்டியாளர்களின் தகுதி தொடர்புடைய விபரங்கள்
சிவில் சர்விஸ் தேர்வுக்கு ஒவ்வொடு ஆண்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்கான அடிப்படைத் தகுதிகளான தேசியம், வயது வரம்பு, கல்வித் தகுதி எத்தனை முறை முயற்சி செய்யலாம். உடற்கூறு தகுதி, விண்ணப்பித்தல் மற்றும் இடஒதுக்கீடு போன்றவை பற்றிய விபரங்கள் வருமாறு:
தேசியம் (Nationality):
1. ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் ஐ. பி. எஸ்., ஆகிய மூன்று பணிகளுக்கும்
இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
2. மற்ற பணிகளுக்குக் கீழ்கண்டோர் தேர்வு செய்யப்படுவர்:
- இந்தியக் குடியுரிமை பெற்றவர்.
- நேபானக் குடியுரிமை பெற்றவர்.
- பூட்டான் குடியுரிமை பெற்றவர்.
- இந்தியாவில் திரந்தரமாக வசிக்கும் எண்ணத்துடன் 01.02 1963க்கு முன்னர் இந்தியாவிற்கு
வந்துவிட்ட ”திபெத்" நாட்டு அகதிகள் (Refugees). இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும்
எண்ணத்துடன் பாக்கிஸ்தான், பரிமா ஸ்ரீலங்கா, வியட்னாம் மற்றும் சில கிழக்கு
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் உட்பட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குக்
குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழியினர்.
2. வயது வரம்பு:
ஓர் இளைஞர் எந்த ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்கிறாரோ, அந்த
ஆண்டில் ஆகஸ்ட் முதல் நாளன்று (Age as on 1st August every year) குறைந்தபட்சம் 21
வயது நிறைந்தவராகவும், அதிக பட்சம் 32 வயது நிறையாதவராகவும்
(வயது 21க்குமேல் 32க்கு உட்பட) இருக்க வேண்டும்.
கீழ்க்கண்டவருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்படும்:
i. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST)
5 ஆண்டுகள் வரை (32+5-37 வயது வரை)
ii. இதர பின்தங்கிய வகுப்பினரில் (OBCயினர்) இடஒதுக்கீடு பெறத்தகுதி உடையோர்
3 ஆண்டுகள் வரை (32+3-35 வயது வரை)
iii. நாட்டைக் காக்கும் பணியில் உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படை வீரர்கள்
3 ஆண்டுகள் வரை (32+3-35 வயது வரை)
iv. ஓய்வுபெற்ற இராணுவப் படையினர் மற்றும் ஐந்து ஆண்டு ராணுவப் பணிக்குப் பின்னர்
ஓய்வு பெற்றுள்ள 'கமிஷண்ட் அதிகாரிகள் மற்றும் ECOS/SSCOS
5 ஆண்டுகள் வரை (32+5-38 வயது வரை)
v. பல்வேறு வகை உடல் ஊனமுற்றோருக்கு
10 ஆண்டுகள் வரை (32+10-42 வயது வரை)
vi. மேற் குறிப்பிடப்பட்டவற்றுள் SI.No.(iii) ( iv) மற்றும் (v)ல் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC),
பழங்குடியினர் (ST) மற்றும் இதர பின்தங்கிய வகுப்பு (OBC) ஆகியோருக்கு அவர்களுக்கு உரிய
வயது வரம்புகளுக்கு உரிய அதிகப்படியான ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
3.கல்வித்தகுதி:
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பட்டம் (Degree) பெற்றவராக இருக்க வேண்டும்.
கல்லூரியில் சேர்ந்து (Regular Course) பயின்றாலும் அஞ்சல் வழி மூலமாக (Correspondence Course) பயின்றாலும் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
பட்டப்படிப்பில் இவ்வளவு மதிப்பெண்களை பெற்றால்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதிவிட்டு தேர்வின் முடிவுக்குக் காத்திருப்போகும் தொடக்கநிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் இத்தேர்வில் வென்று முதன்மை எழுத்துத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பொழுது, தாம் பட்டப்படிப்பின் இறுதித்தேர்வில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை இணைத்து அனுப்புதல் இன்றியமையாதது.
4. எத்தனை முறை முயற்சி செய்யலாம் ? (Number of Attempts)
அனைத்துத் தரப்பினரும் இத்தேர்வினை ஆறு முறை எழுத அனுமதிக்கப்படுவர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தங்களுக்குள்ள வயது வரம்புக்குள் (21க்கு மேல் 37க்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
இதர பின்தங்கிய வருப்பினரில் (OBCயினரில்) இடஒதுக்கீடு பெறத் தகுதி உடையோர் தங்களுக்குள்ள வயது வரம்புக்குள் (21க்கு மேல் 35க்குள்) ஒன்பது முறை முயற்சி செய்யலாம்.
பல்லேறு வகை மாற்றுத்திறனாளியினரைப் பெருத்த வரை பொதுப்பிரிவினர்(GL), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS) மற்றும் இதர பின்தங்கியோர் ஆகியோர் ஒன்பது முறை முயற்சி செய்யலாம். இதில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) தம் வயது வரம்பிற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
குறிப்பு:
ஒருவர் தொடக்கநிலைத் தேர்வி எழுதினால் போதும், அவர் ஒரு முயற்சி செய்துவிட்டார் என்று கொள்ளப்படும்.
தொடக்கநிலைத் தேர்வில் ஒரு தாளுக்குத் தேர்வு எழுத அமர்ந்தாலும் அது
ஒரு முயற்சியாகக் கொள்ளப்படும்.
5. உடற்கூறு தகுதி:
சிவில் சர்விஸ் தேர்வு எழுதுவோர் அனைவரும், அவர்கள் விரும்பும் பணியில் சேறுவதற்குரிய உடற்கூறு தகுதி பெற்றிருத்தல் இன்றியமையானது. அவர்களுக்கு இருக்க வேண்டிய உடற்கூறு தகுதி பற்றி அந்தந்த ஆண்டு வெளியிடப்படும் தேர்வு குறித்த அறிவிக்கையில் (Notification) விபரமாக குறிப்பிடப்படுகிறது.
6. சில முக்கியத் தகவல்கள்:
சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.எ.எஸ். (IAS) மற்றும் ஐ.எஃப்.எஸ்.(IFS) மற்றும் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் மீண்டும் சிவில் சர்விஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.
சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ. பி.எஸ். (IPS) பணியில் இருப்பவர் மீண்டும் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். (IPS) பணியில் சேர அனுமதிக்கப்படுவதில்லை.
7. தேர்வுக்கு விண்ணப்பம் செய்தல்:
போட்டியாளர்கள் அனைவரும் மத்திய தேர்வு ஆணையத்தின் (UPSC) வலைதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். வலைதள முகவரி upsconline.nic.in விண்ணப்பம் செய்தல் தொடர்பான முzu விபரத்தினையும் UPSCளின் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தொடக்கநிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் போட்டியாளர்கள் தாம் எல்லா தகுதியும் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து வலைத்தளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும். தொடக்கநிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது வயது, கல்வித்தகுதி, சாதி போன்றவை குறித்து எந்த சான்றிதரும் இணைக்க வேண்டியதில்லை.
முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்பொழுது உரிய சான்றிதழ்களை இணைத்தல் வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
8. தேர்வுக் கட்டணம்:
தொடக்நிலைத் தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் ரூபாய் 100/- தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து பெண்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் அனைவரும் ரூபாய் 200/- தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
9. இட ஒதுக்கீடு:
சிவில் சர்வீஸ் தேர்வில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (Scheduled Caste SC பழங்குடியினர் (Scheduled Tribes ST), இடஒதுக்கீடு பெறத் தகுதி உடைய மற்ற பின்தங்கிய வகுப்பினர் (Other Backward classes -OBC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கிறுதியாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) - 15% இடமும்
பழங்குடியினர் (ST) - 7.5% இடமும்
இடஒதுக்கீடு பெறத் தகுதி உடைய
இதர பின்தங்கிய வகுப்பினர் (OBC) - 27% இடமும்
பொருளாதாரத்தில் பிஸ்தங்கியவர் (EWS) - 10% இடமும்
ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதம் உள்ள இடங்கள் அனைத்தும் பொது இடங்கள். நிலை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகின்ற.
ஓர் ஆண்டில் ஐ.ஏ.எஸ். (I.A.S) பணிக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கொள்ளவேண்டுமானால், சமூக நிலை மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) 15 பேரும். பழங்குடியினர் (ST) 8 பேரும். இடஒதுக்கீடு பெற தகுதி படைத்த இதர பின்தங்கிய வகுப்பினர் (OBC) 27 பேரும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் 10 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அடுத்து வரும் அத்தியாங்களில், சிவில் சர்விஸ் தேர்வு எழுதும் போட்டியாளர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தேர்வின் தன்மை மற்றும் அணுகுமுறை போன்றவை பற்றி விபரமாகக் காண்போம்.






Users Today : 13
Total Users : 106594
Views Today : 13
Total views : 434338
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1