14 May 2023 11:00 amFeatured

வாரம் ஒரு கவிஞர்

தன்னைப்பற்றி
சென்னை சோழிங்கநல்லூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் பள்ளிப்பருவத்தில் தமிழ் மீது பற்று கொண்டு சிந்தனையில் உதித்த சில சிதறல்களை தமிழ் கொண்டு வடித்தேன்.
வடித்ததை என் தமிழ் ஆசிரியர் திரு சரவணன் ஐயா (முத்தையாதாசன்) அவர்கள் பார்த்துப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு என்னை ஊக்கி வைக்க சில கவி வடித்தேன்.
பள்ளிப்பருவத்துடன் முடிந்த என் கவிப்பயணம் மீண்டும் தொடர அவரே வித்தாக அமைந்தார். அலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு என் கவி பயணத்தை மீண்டும் தொடர வைத்தார்.
நோசன் பிரஸ் நடத்திய ஆன்லைன் சிறுகதை போட்டியில் எனது மூன்று கதைகளை பதிவிட்டு இருந்தேன்.
இலக்கியச் சோலை மாத இதழில் கடந்த மூன்று ஆண்டுகளாக என் கவிதைகள் இடம் பெற்று வருகிறது.
நன்றி வணக்கம்.
பிரபு சுப்பிரமணியம்,
எண்-01, 36வது குறுக்கு தெரு, கிராம நெடுஞ்சாலை,
சோழிங்கநல்லூர்,சென்னை – 600119
📱 9940088499

திரு வாழ் மங்கை
வெறுத்து ஒதுக்கிய சமுதாயத்தை கண்டு
மரத்துப் போன உள்ளத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்….
திருநங்கை!
ஆயிரம் கைகள் சேர்த்து
மறைத்தாலும் சோர்ந்து போகாமல்
நிமிர்ந்து நிற்கிறாள்….
திருநங்கை!
யாரோ சொன்னான் என்று
சிறிய எண்ணம் வந்து
பெரும் குழப்பத்தில் தன்னை தாழ்த்தி
அவளின் கனவை பூட்டி வாழ்கிறாள்….
திருநங்கை!
சிறகொடிந்தாளும் தீயை தாண்டி
எதிர்காலத்தை நோக்கி பறக்கத் துடிக்கிறாள்….
திருநங்கை!
வாழ விடாத சமுதாயத்தில்
வயிற்றுப் பசி தீர……
தெருக்களிலே கைதட்டி
தன்னை சேர்ந்தவர்களுடன் கையேந்தி
அவள் தேவையை பூர்த்தி செய்கிறாள்….
திருநங்கை!
பகலிலே துரத்தினாலும்
இரவிலே தேடுவான் சுகத்தில் மூழ்க…
இருட்டிலே தெரியாதோ அவள்
திருநங்கை!
பிறப்பின் அர்த்தத்தைத் தேடி
இரு உணர்வுகளை சுமந்து
ஒரு உள்ளமாய் வாழ்கிறாள்
திருநங்கை!
உடலிலே ஆணாக
உணர்விலே பெண்ணாக பிறப்பெடுத்து
நடுநிலையாக வாழாமல்
ஒரு நிலையாய் மாற துணிந்தவள் தான்
திருநங்கை!
தூற்றுவார் தூற்றினாலும்
போற்றுவார் போற்றினாலும்
மாற்றங்களை சுமந்து வாழ்கிறாள்
திருநங்கை!






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37