06 Dec 2022 12:15 pmFeatured

கவிஞர் பிரபு முத்துலிங்கம், மும்பை
கல்வியைக் கண்களாக்கி
சாதியை செருப்பாக்கி
நெஞ்சினில் சுடர்விட்டது
சமுதாய மாற்றம் என்று…!
தீட்டென்று தூரமாக்கி
ஓரமாக்கிய போதும்
தலைநிமிர்ந்து வாழ்வோமென்று
கரும்பலகையில்
வெண்மை வழியைக்கண்டார்
கடல்கடந்து கல்வி பெற்று
காண்போரை வியக்கவைத்து
தாய் மண்ணில் கால் பதித்தார்
மாற்றங்கள் பல வேண்டி…!
பலக்கொடுமைகள் கண்ணெதிரே
வலிகளை வழிகளாக்கி
பகுத்தறிவு நூல்கள் தந்தார் படிக்க…!
விதையும் விருட்சமாய்
ஒளி வந்தது பிரகாசமாய்
மண்ணைப் பிளந்து உலகைக் காணும்
விதையினைப்போல்…!
இருள்படர்ந்த இதயத்தில்
சுடர்விளக்கேற்றி வழிகாட்டி
மதம் கொண்ட மதம் வேண்டாம்
சமநிலை கொண்ட உயிர்கள் வேண்டுமென்று…
சட்டத்தை இயற்றினார்
சாதனை புரட்சியாளர்…!
விடிவெள்ளியே - உம்
உடல் தான் மண்ணுக்குள்
உயிர் உலகின் உயிர்களிடம்
சுடர் விட்டு வழிகொடுக்கும்
உலகம் உள்ள வரையில்….!






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37