26 Jan 2022 3:33 pmFeatured

அன்னைத்தமிழின் அருமைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது எனக்கருதி மொழியுணர்வோடு போரிட்டுத் தம் இன்னுயிரை ஈந்த ஈகியர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலில் இயக்க உணர்வாளர்களும், தமிழுணர்வாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக மொழிப் போர்த் தியாகிகளின் வீர உணர்வை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதம் 25 ஆம் நாளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.
அந்த வகையில் மராத்திய மாநிலத்தில் கழகம் வளர்த்து தமிழும் சிறக்க வாழ்ந்து வரும் மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் இலக்கிய அணி, இளைஞரணி மற்றும் பல்வேறு கிளைக் கழகங்களும் அதன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்களென மொழியுணர்வாளர்கள் பலரும் பல்வேறு பகுதிகளில் நேற்று 25-01-2022 நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
கோரேகான் கிளைக் கழகம்


மும்பை புறநகர் மாநிலம் கோரெகான் கிளை சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கடை பிடிக்க பட்டது.
கோரேகான் பகத் சிங் நகரில் தியாகிகள் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் புறநகர் மாநில தி.மு.கழகச் செயலாளர், அலி ஷேக் மீரான், இலக்கிய அணி ப் புரவலர் குமரேசன், மெஸ் ரவி, ஜான் வர்கீஸ், H.மொகிதீன் பாய். K.P. மாரி முத்து,, A.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து அந்த பகுதி பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
பாண்டூப் கிளைக் கழகம்

பாண்டூப் கிளைக் கழகம் சார்பாக மும்பைப் புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமையில் மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முகமது அலி ஜின்னா, ச.சி.தாசன், குமாரசெல்வன், பாலஸ்துரை ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கல்யாண் கிளைக் கழகம்

கல்யாண் விட்டல்வாடியில் வைத்து மும்பை புறநகர் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்ற கழக துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் முன்னிலையில் டோம்பிவிலி கிளைக்கழகச் செயலாளர் வீரை சோ பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் மற்றும் கல்யாண் கிளைக்கழக செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
ஜெரிமெரி கிளைக்கழகம்

மும்பை புறநகர் மாநில திமுக , ஜெரிமெரி கிளை சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
ஜெரிமெரி கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் வ.ரா.தமிழ்நேசன், ஜெரிமெரி தமிழ்ச் சங்கம் அறங்காவலர் குழுத் தலைவர் கோ.சீனிவாசகம், சாந்திவிலி தாலுகா இ.காங்கிரஸ் பிரமுகர் அருண் தேவமாணிக்கம், பாக்யவிநாயகர் கோவில் கமிட்டித் தலைவர் எஸ்.நாகராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டு மொழிப் போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
பீவாண்டி கிளைக் கழகம்

மும்பை பிவாண்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கு பிவாண்டி கிளைக் கழக அவைத் தலைவர் முகமது அலி தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாஷா, இலக்கிய அணித் துணைச் செயலாளர் ஜெயனுலாபுதீன், பொருளாளர் முஸ்தாக் அலி பேராசிரியர் சம்பத், ஜாஹிர் ஹசன், மோண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தானே - முலுண்டு கிளைக் கழகங்கள்

மும்பை புறநகர் மாநிலம் முலுண்ட்-தானே கிளைக் கழகங்கள் சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் கடை பிடிக்க பட்டது.
தியாகிகள் படத்திற்கு மாலை சூடி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தானே செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் செயலாளர் சு.பெருமாள் மற்றும் உ.சங்கரசுப்பு மற்றும் இ.மாடசாமி, சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.