15 Apr 2019 7:53 pmRecent Post

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். விடுதியில் உள்ள ‘சி’ பிளாக் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு அறையாக நீண்ட நேரம் சோதனை நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பணம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சில துண்டு சீட்டுகள் மற்றும் வெற்றுப்பைகள்
கைப்பற்றப்பட்டதாகவும், அங்கு இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.






Users Today : 2
Total Users : 106687
Views Today : 2
Total views : 434446
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1