29 Mar 2020 10:24 amFeatured

பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர்.
தூள் படத்தின் மூலம் நடிகை மற்றும் திரைப்பட பாடகியாக அறிமுகமானார். அப்படத்தில் வரும் சிங்கம் போல பாடல் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். 20க்கும் மேற்பட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தவராவார்.
83 வயதான நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37