21 Mar 2020 9:20 amFeatured

பிரதமர் அறிவிப்பு
வரும் ஞாயிற்றுக் கிழமை 22.03.2020 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவசியம் இன்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். 60 வயதுக்கு மேலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் நிகழவிருக்கும் இயற்கை அழிவுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அறிவதற்கு உதவியாக இந்த ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சுய ஊரடங்கை அனைவரும் பின்பற்றும் வகையில் மார்ச் 22 அன்று மின்சார ரயில்கள் குறைவாக மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை சென்னை, டெல்லி, பெங்களுருவில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் செகந்திராபாத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் சேவை மிகவும் குறைந்த அளவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் கேட்டரிங் சர்வீஸ் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






Users Today : 11
Total Users : 105073
Views Today : 13
Total views : 432295
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111