Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்

20 Mar 2020 8:55 amFeatured Posted by: Sadanandan

You already voted!

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், டெல்லியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.  இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர்களை  குற்றவாளிகள் என கண்டறிந்த போலீஸார்   ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு உடல்நிலை மோசமானதால், அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்து அதன்படி, டிசம்பர், 29 ஆம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி  மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்." 

இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நீதிமன்றத்தில் சிறார் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 5 பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்ற 4 பேரின் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது, கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். எனினும் தூக்கில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியதன் காரணமாக, தண்டனை நிறைவேற்ற 2 முறை நாள் குறிக்கப்பட்டும் நிறைவேற்றமுடியாமல் போனது. இப்போது, 3-வது முறையாக மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நாள் குறிக்கப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.  

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

115730
Users Today : 32
Total Users : 115730
Views Today : 36
Total views : 445570
Who's Online : 0
Your IP Address : 216.73.216.134

Archives (முந்தைய செய்திகள்)