12 Mar 2020 12:13 amFeatured

எஸ்.பி.ஐ (State Bank Of India) வாடிக்கையாளர்கள் அனைவரும் இனிமேல் தங்களின் சேமிப்புக் கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ள 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். அத்துடன் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு 3% வட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெருநகரங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் சேமிப்புக் கணக்கில், மாதம் ரூ.3 ஆயிரமும், சிறிய நகரங்களில் கணக்கு வைத்திருந்தால் மாதம் ரூ.2 ஆயிரமும், கிராமப்புற வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.ஆயிரமும் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்க வேண்டும். இதில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 வரை அபராதமும், ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.
இனிமேல் எந்தவிதமான குறைந்தபட்ச இருப்புத் தொகை அதாவது ஜீரோ பேலன்ஸ் கணக்கைப் பராமரிக்கலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும், முக்கிய அறிவிப்பாக வைப்புத் தொகைக்கான வட்டியைக் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. தற்போது சேமிப்புக் கணக்குகளில் வைப்புத் தொகைக்கு ரூ.1 லட்சம் வரை 3.25 சதவீதம் வட்டியும், ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக 3 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து சேமிப்புக் கணக்கு டெபாசிட்களுக்கும் ஒரே மாதிரியாக 3 சதவீத வட்டியாக அறிவித்துள்ளது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37