20 Jan 2020 7:48 pmFeatured

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா, சங்க நான்காம் ஆண்டு விழா 19.01.2020 ஞாயிறு மாலை 5.30 மணி முதல் பத்லாபூர் கிழக்கில் உள்ள மோகன் பாம்ஸ், பென்டுல்கர் மங்கள் காரியாலயாவில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்க பொருளாளர் ஜே. எபினேசர் வரவேற்புரையாற்ற, இணைச் செயலாளர் முனைவர் இரவிக்குமார் ஸ்டீபன் தொடக்கவுரையாற்றினார்.
அபூர்வ கெமிகல்ஸ் நிர்வாக இயக்குநர் சக்தி கண்ணன், பத்லாபூர் நகர்மன்ற துணைத் தலைவர் ராஜேஷ்வரி கோர்படே, அபூர்வ கெமிகல்ஸ் உரிமையாளர் சண்முக சுந்தரி கண்ணன், இந்தியன் வங்கி பத்லாபூர் கிளை மேலாளர் எஸ்.எஸ். சாரி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் கவிஞர் நெல்லை பைந்தமிழ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.துணைத் தலைவர்கள் ச.அருணாச்சலம், முனைவர் பா. வெங்கடரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் இந்திய ஏவுகணை நாயகன் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த தின விழா “வாசிப்போம் நேசிப்போம்” நிகழ்வினை முன்னிட்டு 12.10.2019, 13.10.2019 ஆகிய தேதிகளில் பல வண்ணக் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற 20 பேர் மற்றும் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற 32 பேர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் கோப்பை, பதக்கம், நூல்கள் முதலிய பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இணைச் செயலாளர் திருமதி சரோஜா உதய்குமார் நன்றி கூறினார்.
மீனாட்சி வெங்கட், ஜெயந்தி சிவானந்த் ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் பொறுப்பும் சங்க நிர்வாகிகள், அ. அகஸ்டின், டி.வெங்கடேசன், எஸ். கோவிந்தராஜ், கணேஷ் கண்ணன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். பத்லாபூரில் வாழும் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்.
விழா நிறைவில் திரு சக்தி கண்ணன், திருமதி சண்முக சுந்தரி கண்ணன் அவர்கள் சார்பில் அனைவருக்கும் சுவையான இரவு உணவு வழங்கப்பட்டது.






Users Today : 29
Total Users : 106475
Views Today : 33
Total views : 434202
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37