02 Oct 2019 9:27 pmFeatured

மண்ணில் பூத்த மன்னவ னுன்னை
கண்ணில் வைத்து காத்திடு கின்றேன்!
என்னில் தோன்றும் எண்ணங்க ளெல்லாம்
உன்னில் விளைந்த விதைகள் தானே!!
தானே எவரும் தரத்தினை உயர்த்த
வீணே கிடந்து உழைத்து நின்றாலும்!
தன்னலம் கருதா தரமுடைத் தோர்க்கே
விண்ணகம் யாவும் உறவு களாகும்!!
ஆகும் அனைத்தும் அன்பா லென்று
வன்மம் தரித்த வம்பினர் வாழ்வில்!
படித்திட கிடைக்கும் படிகள் யாவும்
அண்ணல் காந்தி அடிகள் நெஞ்சில்!!
நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால்
நன்மை என்று நாட்டார் நினைத்தார்!
ஊரும் உலகும் உறவெனக் கதற
உரமாய் நின்றார் உத்தம காந்தி!!
காந்தி அடிகள் கரையிலா வாழ்வு
கணக்காய்க் கற்கும் கற்போர் பலர்க்கு!
கருத்தாய் புகழைக் கொணர்ந்தே சேர்த்து
காலந் தோறும் கவலை மறக்கும்!!
மறக்கும் நெஞ்சம் மண்ணில் இல்லை!
உலகில் அன்பை விதைத்த நெஞ்சோன்!
நூறும் ஐம்பதும் நிறைந்த ஆண்டில்
நாளும் தொழுவோம் நல்லவர் நெறியை!!






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150