17 Apr 2019 10:50 amFeatured

"நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா? என்பதை வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் மோடி கண்காணிப்பார்”
என்று குஜராத் பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில், தாஹூத் தொகுதியில் பிரசாரம் செய்த குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா, வாக்காளர்களை மிரட்டும் வகையில் வில்லங்கமாக பேசியுள்ளார்.
“யாரெல்லாம் பாஜகவுக்கு வாக்களிக்கிறீர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க இம்முறை பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். டெல்லியில் இருந்து மோடி பார்ப்பார். பாஜகவின் ஓட்டு குறையும் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறையும்” என்று ரமேஷ் கடாரா மக்களிடையே பேசினார்.






Users Today : 12
Total Users : 106593
Views Today : 12
Total views : 434337
Who's Online : 1
Your IP Address : 216.73.216.1