28 Aug 2020 8:16 pmFeatured

கொரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.பி வசந்தகுமார் காலமானார்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 11ல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70
வசந்தகுமார் உடல் சொந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குமரி தொகுதியில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்தவர். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தவர் வசந்தகுமார்.
1950 ஏப்ரல் 14ல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவராவார். வசந்த் அன்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவி வர்த்தக துறையில் சாதனை படைத்தவர்.
2006ல் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வானார்.2016லும் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
ரூ.412 கோடி சொத்து விவரத்தை அறிவித்து தேர்தலில் போட்டியிட்டவர். ஆவார்
வசந்தகுமார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரரும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் சித்தப்பாவுமாவார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராகவும் இருந்து வந்தவர். வசந்தகுமார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தவர் ஆவார்.






Users Today : 15
Total Users : 108828
Views Today : 15
Total views : 436864
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150