Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தென்னரசு மின்னிதழ் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை

22 Feb 2022 1:21 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures third prize

(மீள் பதிவு)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
உமாமகேஸ்வரி மனோராஜ், க்ளீவ்லாந்து-USA

"சரவணா.... சரவணா....." வெளியில் நின்று குரல் கொடுத்தான் ரவி.

"யாரு? கூடப்படிக்கிற பயலுவளா?" வெளியில் வந்து பார்த்தாள் சரவணனின் அம்மா வேலாயி.

"ஆமாம்மா, அவன் இன்னிக்கு ஸ்கூலுக்கு வரலலைல அதான் பாத்துட்டு போலாம்ன்னு வந்தோம்" 

"வாங்க வாங்க. நேத்து பொழுது சாஞ்சதுல இருந்து நானும் அதைத்தேன் கேட்டுக்கிருக்கேன். வாயத்தொறக்க மாட்டேங்கிறான். படுத்த இடத்தைவிட்டு எந்திரிக்கல, சோறுதண்ணி உங்கல. நீங்க கேளுங்க. ஓங்கிட்டாயாது சொல்றானா பாப்போம்"

"டேய், என்னடா... என்னாச்சு? ஏதாது சொன்னாத்தானே தெரியும்" உள்ளே வந்து அவனைச்சுற்றி அமர்ந்தனர் நண்பர்கள்.

எழுந்து அமர்ந்த அவன் "சொல்றேன். அம்மா, பசங்களுக்கு காப்பிவாங்கியா" என கூறி அனுப்பிவிட்டு அவள் தலை மறைந்ததும் பொரிந்து கொட்டத்தொடங்கினான்.

"டேய், இந்த புது ஹெட்மாஸ்ட்டர்க்கு என்ன கண்டாலே ஆகலன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அதுக்காகத்தான் எந்த தப்புலையும் மாட்டிக்கக்கூடாதுன்னு நா பாத்து பாத்து நடந்துக்கிறேன். ஆனா கூப்ட்டு வச்சு கொடுமைப்படுத்தறதுலாம் சுத்த வக்கிரம் இல்லையா டா?"

"என்னடா ஆச்சு, நேத்து சாயங்காலம் அவர் கூப்பிட்டாருன்னு போன, திரும்பி வர லேட் ஆச்சுன்னு நா வீட்டுக்கு போய்ட்டேன். என்னதான் சொன்னாரு?" என்றான் வாசு.

அவன் மௌனக்கண்ணீர் வடிக்க "சும்மா சொல்லுடா" என ரவி உந்தினான். "டேய், எங்கப்பா என்ன வேலை பாத்தாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். நானும் அவரை மாதிரி சாக்கடை அள்ளக்கூடாதுன்னு தான் என்ன இங்கிலீஷ் மீடியத்துல படிக்கவச்சாரு. நா படிச்சு பெரியாளா வரணும்ன்றது தான் அவர் கனவே. அவர் பாதாள சாக்கடைல இறந்துபோன அப்புறம்கூட எங்கம்மா கவர்மெண்ட் ஸ்கூல்ல சேத்துவிட்டுச்சே தவிர என் படிப்பை நிறுத்தலை."

"இதெல்லாம் தெரிஞ்சது தானேடா. இப்போ என்ன ஆச்சு? ஏன் நீ ஸ்கூலுக்கு வரலன்னு தான் தெரில" என்றான் ரவி.

"நேத்து அவர் என்னைக்கூப்பிட்டு, நம்ம ஸ்கூல் ஆயா வரல, இன்னிக்கு ஒரு நாள் நீ கக்கூஸ் எல்லாத்தையும் கழுவிடுன்னு சொல்றாரு டா. எனக்கு எப்படி இருந்திருக்கும்? உடம்பே கூசி போச்சுடா. இருந்தாலும் அவர் குத்தம் சொல்ற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு சொன்னதை செஞ்சேன். பாத்ரூமைக்கழுவி அள்ளிக்கொட்டி எல்லாம் முடிஞ்ச அப்புறம் இந்தக் கையால சோறைத் தொடவே பிடிக்கலடா. கொமட்டிட்டு வருது.

இது தெரிஞ்சா நீங்க எல்லாரும் என்ன ஒதுக்கிடுவீங்களோன்னு பயந்துட்டேன். அந்த பயத்தோட நா எப்படிடா உங்க எல்லார் முகத்துலயும் முழிப்பேன்? ஏன்? நாங்கெல்லாம் படிக்கவந்தது தப்பா? இல்ல தலைமுறைக்கும் கக்கூஸ் தான் அள்ளணுமா? படிக்கவே கூடாதா? அம்மாக்கு தெரிஞ்சா உசுரையே விட்டுடும்." என நண்பனின் கையில் முகம் புதைத்துத் தேம்பி அழுதான் சரவணன்.

"டேய், ஒரு ஆளு ஒரு நாளு உன்ன ஓதுக்கிட்டாருன்னு நீ ஒடஞ்சு போய் உக்காந்தா உங்க அப்பா கனவு எப்படிடா நனவாகும்? நீ நாளைக்கு எப்பவும் போல ஸ்கூலுக்கு வா. எச்.எம்க்கு புரிய மாதிரி பதில் சொல்லிடலாம்" என்றான் ரவி.

“முருகேஷ்" , "உள்ளேன் அய்யா”

“ரவிக்ரிஷ்ணன்”, "உள்ளேன் அய்யா”

“சரவணப்பெருமாள்…. சரவணப்பெருமாள்….”

“டேய் சரவணா, நீ தான் டா…” நண்பனின் உலுக்கலில் சிந்தனையிலிருந்து மீண்டு “உள்ளேன் அய்யா” என்றான்.

"சார், அந்த சக்கிலியப்பையன பெரிய வாத்தியார் கூப்பிடறாரு" தனக்குத் தெரிந்த மொழியில் கூறிவிட்டுப்போனான் பாமரப் பியூன்.

கூனிக்குறுகி எழுந்த சரவணனின் கையைப் பிடித்து நிறுத்தி எழுந்தான் ரவி. கூடவே அனைவரும் எழுந்தனர். என்னவென்று புரியாமல் பார்த்த ஆசிரியரை ஒரு தலையசைப்பால் விலக்கிவிட்டு அனைவரும் தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடந்தனர். சலசலப்பை உணர்ந்து வெளியே வந்த அவர் மாணவர்கள் அனைவரைக்கண்டதும் திடுக்கிட்டார். உடனே சுதாரித்துக்கொண்டு "என்ன இங்க கூட்டம்? ஒருத்தன கூப்பிட்டா ஊரே வந்து நிக்கிறீங்க? போங்க கிளாசுக்கு போங்க" என்றார்.

நீங்க கொடுக்கணும்னு நெனச்ச வேலைய செய்யத்தான் எல்லாரும் வந்திருக்கோம் சார்." என்றான் ரவி

"என்ன ஒளறுறீங்க? எனக்கு கோபம் வரும் முன்ன கிளாசுக்கு போங்க" என்று கத்தினார்.

"எதுக்கு சார் போகணும்? எல்லாருக்கும் பொதுவான பாத்ரூம் தானே அது, அத எல்லாருமே சேந்து கழுவுறது தானே சரி?" என்றான் வாசு.

"எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பாருங்க, ஜப்பானை பாருங்கன்னு சொல்றீங்களே. அங்கெல்லாம் அவனவன் வீட்டு கக்கூசை அவனவனே தான் கழுவுறான். நாம தான் அதுக்குன்னே தனி ஜாதின்னு பிரிச்சு மனுஷனையே மலம் அள்ள வைக்கிறோம், இது எங்க தலைமுறைல மாறணும்ன்னா அது எங்க கைல தான் இருக்கு"

"அதுக்காக தான் இனிமே தினமும் ரெண்டு ரெண்டு பேரா டர்ன் போட்டு நாங்களே சுத்தம் பண்ணிக்கிறோம். நீங்க கவலைப்படாதீங்க சார்."

அதற்குள் கூடிவிட்ட அனைத்து மாணவர் ஆசிரியர் கூட்டத்தைக் காணமுடியாமல் தலை கவிழ்ந்தார் தலைமையாசிரியர்

எங்கிருந்தோ பண்பலையின் ராகம் வாலியின் வரிகளை சுமந்து வந்தது

"நட்டவிதை யாவும் நல்ல மரமாகும்" 

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
புருஷோத்தமன் பெ
புருஷோத்தமன் பெ
2 years ago

ஒரே மூச்சில் மூன்று கதைகளை படித்து முடித்து விட்டேன்.. எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கும், தெரியாது, எனக்கு படிக்க என்று பதிவிறக்கம் செய்த ஆராய்ச்சி நூல்களை தொட்டு பார்க்கவே பத்து வருடங்கள் போதாது.. இந்த சிறு கதை கரு முந்தைய கதை போலிருந்தாலும்.. இதுவும் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது… இதுவும் என் நினைவுகளை தூண்டுகிறது…இந்த பிக் பாஸ் டிவி புராகிரமில் இது மாதிரி கொடி தூக்குவார்களா..அல்லது அந்த புரோகிராமை மாற்றத்தை நோக்கி செல்வார்களா..அதுவும் அரசியல் களத்தில் உள்ளவர் சிந்தனை செய்வாரோ…இதன் புரட்சி முறை ஒரு அழகான புரிதலோடு உள்ளது…

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 18.223.159.195

Archives (முந்தைய செய்திகள்)