Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அமானுஷிய தண்டவாளம் – ர. ரமேஷ்

21 Jan 2022 1:19 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-08
படைப்பாளர் - ர. ரமேஷ், திருப்பூர்

ஹலோ இங்க பாருங்க அங்க என்ன பண்றீங்க என்ன பாருங்க  உங்களைத்தான் என்னை
பாருங்க       நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா என்று பீட்டர் குரல் கொடுக்க எதுவும்
கேட்காது போல் தண்டவாளத்தின் டனலையே ஒரு நபர் உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அந்த டனலையே முறைத்த படி சற்று பயத்துடன் மேலிருந்த பீட்டரை பார்த்தார்.
பீட்டர் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் பட்டபடிப்பு படிப்பதற்க்காக வெளிநாடு செல்ல வேண்டும்
என்று தன் தந்தையிடம் கூற அவரும் சரி என்று அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தார்.
மூன்று நாட்கள் பயணம் செய்து வெளிநாடு வந்து சேர்ந்தான்

பீட்டர். வந்ததும் தன் படிப்பிற்கு எந்த கல்லூரியில் இடம் கிடைத்ததோ அந்த கல்லூரிக்கு சென்று தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அவன் தங்குவதற்கு வசதியாக அறையும் பார்த்துக் கொண்டான்.

அறையை தனக்கேற்றவாறு மாற்றிக் கொண்டு அலுப்பில் உறங்கி விட்டான். மறுநாள் காலையில்
புது நாடு என்பதால் ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பினான். ரம்மியமான சூழல் எழில் கொஞ்சும்
இயற்கை அழகு என ரசித்த படி பாலம் மேலே நடந்து சென்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது தண்டவாளத்தில் நின்ற படி ஒரு நபர் ரயில் செல்லும் டனலை உற்றுப் பார்த்துக்கொண்டும் டனலின் உள்ளே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஹலோ அங்க என்ன  பண்றீங்க உங்களைத்தான்  நான் கூப்பிடுறது உங்களுக்கு கேட்க்குதா என்று சிலமுறை அழைத்த பீட்டர் எந்த வித அசைவும் இல்லை அவர் உள்ளே அந்த டனலின் உள்ளே முறைத்து பார்த்ததுக் கொண்டிருக்க மீண்டும் பீட்டர் அழைத்தான்.அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை பீட்டருக்கு ஆச்சிரியம் நான் இவ்வளவு முறை அழைத்தும் அவர் எந்த பதிலும் கொடுக்கமால் அந்த டனலையே முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்.மீண்டும் ஒரு முறை அழைத்தான் அப்பொழுது தான் அவர் பயத்துடன் மேலே பார்த்தார்.பீட்டரை பார்த்தவர் அவனையும் முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

பீட்டருக்கு  பெரிய குழப்பம் ஏன் இப்படி என்று. கீழே வந்து உங்ககிட்ட பேச ஏதாவது வழி இருக்கானு அவரிடம் பீட்டர் கேட்க கையில் கொடியுடன் இருந்த அந்த நபர் ஒரு வழியை காட்ட பீட்டர் நான் கீழே வந்து உங்களை சந்திக்கிறேன் என்று அவர் காட்டிய அந்த வழியில் இறங்கினான். மிகவும் ஈரமாக இருந்த அந்த வழியில் பாலத்தை விட்டு கீழே இறங்கி அந்த தண்டவாளத்தை வந்தடைந்தான் பீட்டர்.தாண்டவாளம் நீளமாகவும் மிகவும் உறுதியாகவும் இருந்தது. கீழே வந்த பீட்டருக்கும் அவருக்கும் நூறு மீட்டர் இடைவெளி.

இந்த இடைவெளி தூரத்தில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார்.அவரை பார்த்த பீட்டருக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது அவர் வேறு யாரோ அல்ல அந்த பகுதியின் சிக்னல் மேன்.தண்டவாளத்தின் அந்த பகுதி அவர் கண்காணிப்பில் இருந்தது. பீட்டருக்கு பின்புறம் அவர் தங்கும் சிறிய அறை ஒன்று இருந்தது. பீட்டர் அவரை நோக்கி நடந்து செல்ல அவரின் செயல்பாடுகளை பீட்டர் புரிந்து கொண்டான். என் மேல உள்ள பயம் அவருக்கு சற்றும் குறையவில்லை என்று.பீட்டர் அவரை நெருங்க நெருங்க அவர் பீட்டரை விட்டு விலகி போனார்.பீட்டர் அவரிடம் பேச ஆரம்பித்தான். அவரிடம் பேசிக்கொண்டு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் அவர் எந்த பதிலும் பேசாமல் பீட்டரையே உற்றுப் பார்த்துக் கொண்டு அங்கிருந்த சிகப்பு விளக்கையும் பார்த்தார். மீண்டும் பீட்டரை பார்த்தும் சிகப்பு விளக்கையும் பார்த்தார்.அவரின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் பீட்டர் அவரிடம் பேசுச்சு கொடுத்தான் ஏன் என்னை அப்படி பாக்குறீங்க இதுக்கு முன்னாடி நான் உங்கள பார்த்திருக்கேனா என்று பீட்டர் கேட்க. அவர் இல்லை நான் உன்னை பார்த்திருக்கின்றேன்.

பீட்டருக்கு ஆச்சிரியம் இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை நான் வேறு நாட்டை சேர்ந்தவன் நான் இப்பொழுது தான் இந்த நாட்டிற்கு புதிதாக வந்துள்ளேன் இன்றைக்கு தான் இந்த பகுதியை சுற்றி பார்க்க வந்துள்ளேன் என்று பீட்டர் பதில் கூற. அவனின் பதில் அவருக்கு போதுமானதா என்று பீட்டருக்கு தெரியவில்லை. பிறகு அவர் பீட்டருடன் பேச ஆரம்பித்தார். அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.அவரது அன்றாட வேலைகளைப் பற்றி பீட்டரிடம் பகிர்ந்து கொண்டார்.வேலை பெரிதாக ஒன்றும் இல்லை அவருக்கு ரயில் வரும் முன்  இவருக்கு ஒரு மணியோசை போன்று இவரது அறையில் ஒலி அடிக்கும் இதனால் தன்னடவாளத்தில் எந்தவித பிரச்சனை இல்லையென்றால் இவர் டெலிகிரம் மூலம்  ஆல் வெல் என்று பதில் கொடுத்து அனுப்பனும். பிறகு ரயில் கடந்து செல்லும்.. ஒரு சிக்னல் மேனின் அன்றாட வேலைகளை இவரும் கவனித்து வந்தார். இந்த வேலை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது.இதை விட வேறு ஒரு நல்ல வேலை கிடைக்காது என்றும் அவர் நினைத்தார்.

காரணம் அவர் படிக்கும் காலங்களில் படிக்காமல் நாட்களை வீணடித்து விட்டேன் என்றும் படித்திருந்தால்  நல்ல வேலைக்கு சென்றிருப்பேன் என்றும் பீட்டரிடம் கூறினார்.ஆனல் எனக்கு படிப்பில் அதிக ஆர்வம் இல்லை இருந்தாலும் எனக்கு கிடைத்த இந்த வேலை என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று சொன்னார்.ஆனால் இந்த வேலை முடிந்ததும் மீதம் இருக்கும் நேரங்களில் இவர் கணிதம் படிப்பதற்கு பல புத்தகங்கள் வைத்திருக்கின்றேன். இதன் மூலம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று பீட்டரிடம் பகிர்ந்து கொண்டார்.அதுவும்இல்லாமல்வெளிநாடு மொழி ஒன்று கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுகூறினார்.

ஆனால் ஊருக்கு புதிது என்பதால் பீட்டருக்கு என்ன மொழி என்று தெரியவில்லை. இவரிடம் அனைத்து செயல்பாடுகளும் நன்றாகத்தான் உள்ளது.ஆனாலும் அவர் பீட்டரிடம் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அடிக்கடி சத்தம் வராத மணியை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தார். இதைப் பார்த்த பீட்டர் புரிந்து கொண்டான் இவருக்கு ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்று பீட்டர் பலமுறை முயற்சி செய்து பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ள நினைத்தான் ஆனால் அவர் கூறவில்லை.ஒரு வேளை ஒரு நபரை ஒரே நாளில் சந்தித்து அனைத்தும் கூறியதால் இதையும் கூறுவதற்கு தயக்கமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

சரி நாளைக்கு வந்து பார்ப்போம் என்று கூறி கிளம்பினான் பீட்டர்.இவரும் வழியனுப்பி வைக்க கிளம்பினார். இருவரும் தண்டவாளாம் ஓரமாக நடந்து சென்றனர். வழியனுப்பி வைக்கும் முன் அவர் ஒரு கேள்வி பீட்டரிடம் கேட்டார்.நீங்கள் மேலே நின்று என்னை என்னவென்று அழைத்தீர்கள் என்று கேட்டார்.பீட்டர் ஹலோ இங்க பாருங்க என்று அழைத்தேன் என்றான்.எதற்காக அப்படி அழைத்தீர்கள். நீங்கள் கீழே நின்று கொண்டிருந்திர்கள் அதனால் அழைத்தேன். சரி வேறு எதும் காரணம் இல்லயே. இல்லை. சரி வேறு எந்த அமானுஷ்யமான சக்திகளும் உங்களை இப்படி அழைக்க கூறவில்லையே. சத்தியமா இல்லை. சரி நாளை பார்ப்போம் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

அவரின் கேள்விகள் அனைத்தும் பீட்டருக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்தியது. இவர் இப்படி கூறியதும் அவரின் குழப்பங்களுக்கும் பிரச்னைகளுக்கும் அடித்தளமாக இருக்கும் என்று பீட்டரின் மனதில் ஆழமாக பதிந்தது. சரி  எதுவாயினும் நாளை பார்த்துக் கொள்வோம் என்று பீட்டர் வந்த வழியிலேயே மேலே ஏறி சென்றான்.இந்த இடத்திற்கும் அவன் தங்கியிருந்த அறைக்கும் நடந்து செல்ல வேண்டிய தூரம் தான். ஆகவே பீட்டர் நடந்து சென்றான். அவன் நடந்து செல்லும் போது இந்த மனிதர் அவர் பார்க்கும் வேலை அவரிடம் பேசியது என அனைத்தும் அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது.அறையை அடைந்தவன் தனது வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றான். ஆனால் அவனால் உறங்க முடியவில்லை அவரின் நடவடிக்கைகள் அவரின் பேச்சுக்கள் அவருக்கு ஏதோ ஒரு பிரச்னை உள்ளது. அவருக்கு எப்படியாவது நிச்சியமாக நான் உதவ வேண்டும் என்று எண்ணினான். முதல் முறை பார்த்த நபரா இருந்தாலும் சரி யாரோ ஒரு நபரா இருந்தாலும் சரி அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனை உறங்க விடவில்லை.

மறுநாள் காலை எழுந்ததும் கல்லூரி வேலைகளை முடித்து விட்டு அவர் குறிப்பிட நேரத்திற்கு அதாவது இரவுபத்து மணிக்கு அங்கு சென்றான். ஆனால் அவர் வழியனுப்பி வைக்கும் முன் நீ வந்ததும் என்னை மேலிருந்து அழைக்கக் கூடாது என்று கூறியிருந்தார். அதன்படி அவனும் அவரை அழைக்காமல் அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றான்.அவர் நின்று கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. இந்த முறை அவரை அழைக்காமலேயே  அவரின் அருகில் சென்றான். பார்த்தீர்களா இந்த முறை நான் உங்களை எதுவும் கூறாமல் வந்து விட்டேன் என்று பீட்டர் கூற. அவர் சிறிய புன்னகையுடன் அவரின் அறைக்கு அழைத்து சென்றார். அறைக்கு  சென்றதும் அவர் அவரின் பிரச்சனைகளை கூற ஆரம்பித்தார்.அவரைச் சுற்றி பல அமானுஷியா விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஒரு அமானுஷ்ய சக்தி அவரை தொந்தரவு செய்கிறது என்றும் கூறினார்.ஒரு உருவம் இந்த டனலின் சிகப்புவிளக்கு பக்கத்தில் நிற்கிறது இந்த உருவத்தை அவர் பலமுறை பார்த்ததாகவும் இந்த உருவம் அங்கு நிற்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என்றும் அவர் கூறினார். அவர் கூறிய அனைத்தும் பீட்டருக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. மெதுவாக பீட்டர் அவரிடம் என்ன உருவம் அது. என்ன அசம்பாவிதம் நடந்தது என்று கேட்டான்.அவரும் இந்த சிக்னல் மணி எப்பொழுதும் போல் அல்லாமல் முதல் முறையாக வித்தியாசமாக ஒலி எழுப்பியது அந்த மணியையும்   சிகப்பு விளக்கையும் கவனித்தேன் ஏதோ ஒரு உருவம்  டனலின் உள்ளே  சிகப்பு விளக்கின் அருகில் நின்று கொண்டு தனது இடது கையால் முகத்தை மறைத்துக் கொண்டும் வலது கையால் இடது வலது புறமும் அசைத்துக் கொண்டும் இருந்தது.இதைக் கண்ட அவர் அங்கே யார் நிற்பது யார் நீங்கள் என்று கேட்டுக் கொண்டே கையில் விளக்குடன் அந்த உருவத்தை நோக்கி ஓடினேன்.

இரவு நேரம் என்பதால் உருவம் சரியாக தெரியவில்லை. அவர் பக்கத்தில் சென்றதும் அந்த உருவம் அங்கிருந்து காணாமல் போனது.முதலில் எனக்கு ஆச்சிரியமாக இருந்தது இருப்பினும் பயமும் ஏற்பட்டது.சிறிது தூரம் டனலுக்கு உள்ளே ஓடிசென்று பார்த்தேன் ஆனால் யாரும் இல்லை அதனால் என்னுடைய அறைக்கு வந்து விட்டேன் என்று கூறினார்.

சரியாக சில மணி நேரம் கழித்து எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.ஆவலுடனும் சற்று வியப்புடனும் என்ன அது என்ன அதிர்ச்சி என்று கேட்டான் பீட்டர்.ஒரு நாள்  நான் பணியில் இருக்கும் பொழுது இதே தண்டவாளத்தில் என்னுடைய கட்டுப்பாட்டை  மீறி ஒரு ரயில் வந்தது  அதே சமயம் எதிர்முனையிலும் ஒரு ரயில் வந்தது.இரண்டு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் நிறைய உயிரிழப்பும் ஏற்ப்பட்டது.இதோ தெரிகிறதே இந்த சிகப்பு விளக்கின் பக்கத்தில் தான். அந்த உருவம் எங்கு நின்று கொண்டு இருந்ததோ அந்த இடத்தில் தான் நான் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த டனலின் உள்ள இருந்து பலரது சடலங்களை எடுத்து வருவதை நான்  எண் கண்களால் பார்த்தேன்.ஆனால் அந்த உருவம் ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று எனக்கு எச்சரித்தது.ஆனால் இந்த மாதிரி நடக்கும் என்று எனக்கு ஏன் எச்சரிக்கவில்லை என்று கூற. நடுவில் குறிக்கிட்டான் பீட்டர். இது ஒரு விபத்து இது எதிர்பாராமல் நடந்த விஷயம். நீங்கள் பார்த்த அந்த உருவம்  நீங்களாக நினைத்துக் கொள்கிறீர்கள் உருவம் உள்ளதென்று. இப்படி இந்த உருவம் தென்படுவதற்கு  வாய்ப்பே இல்லை.அந்த உருவத்தை நீங்கள்கண்டதும் இந்த விபத்து நடந்தும் நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.மற்றபடி இது ஒரு எதிர்பாராமல் நடந்த விபத்து தான் இதை நினைத்துக்கொண்டு நீங்கள் குழப்பமாக இருப்பதும் கோபமாக இருப்பதும் இதில் எந்த விஷயங்களும் இல்லை என்று பீட்டர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் நான் இன்னும் இதை முடிக்கவில்லை என்று கூறினார். சரி என்று மீண்டும் பீட்டர் கேட்கத் தொடங்கினான். அவரும் இந்த விபத்து எனக்குள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீண்டு வருவதற்கு ஆறு மாதங்கள் ஆனது. ஒருவழியாக மீண்டு வந்து திரும்பவும் முன்பு போலவே எனது வேலைகளை நான் தொடங்கினேன். மீண்டும் ஒருநாள் நான் எனது அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இந்த சிக்னல் மணி மீண்டும் அடித்தது. நான் எழுந்து சென்று இந்த சிகப்பு விளக்கை பார்த்தேன். முன்பு பார்த்த அதே உருவம் அங்கே நின்று கொண்டிருந்தது.நான் விளக்கை எடுத்துக் கொண்டு அந்த உருவத்தை நோக்கி ஓடினேன்.

இந்த முறை அந்த உருவம் எதுவும் பேசாமல் அழுது கொண்டு இரண்டு கைகளால் தன் முகத்தை மறைத்த படி இருந்தது. நான் அருகில் செல்ல செல்ல அந்த உருவம் என்னப் பார்த்ததும் தனது இரு கைகளையும் மெதுவாக இறக்கிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தது. அந்த உருவம் பார்த்த பார்வை இன்றும் என் கண்களுக்குள் நிற்கின்றது. நான் அருகில் சென்றதும் அந்த உருவம் மறையாமல் இருந்தது. அந்த உருவத்தை பார்த்து இந்த முறை எந்த அசம்பாவிதம் நடக்கபோகிறது என்று நான் கேட்டேன். ஆனால் எந்த பதிலும் கூறவில்லை.

அழுது கொண்டே மறைந்து விட்டது.சிலமணி நேரம் கழித்து இந்த தண்டவாளம் வழியே ஒரு ரயில் வருவதை நான் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த ரயிலிருந்து ஒரு சத்தம் கேட்டது ஒரு இளம் பெண் அழுது கொண்டே அந்த ரயிலை விட்டு வெளிய குதித்தாள்.எனக்கு அதிர்ச்சியானது.ஆனால் அந்த பெண் என் கண் முன்னே ரயிலை விட்டு குதித்து இறந்து போனாள். யார் இந்த பெண் ஏன் ரயிலை விட்டு வெளியே குதித்தால் என்று யோசிக்கும் முன் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.ரயிலில் இருந்து அவளுடன் வந்தவர்களும்  ரயிலில் பயணித்த அதிகாரிகளும் ஓடி வந்து அந்த பெண்ணின் உடலை தூக்கி சென்ற சம்பவம் இன்றும் என் நினைவில்.

அந்த பெண்ணின் கண்களை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.ஆனால் அது இல்லை ஆச்சிரியம் அந்த பெண்ணுடன் பயணித்த ஒருவர் அந்த பெண்ணின் உடலை பார்க்க முடியாமல்  இரண்டு கைளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதார். இந்த செயலைத் தான் அந்த உருவமும் எனக்கு காட்டியது.ஆனால் அந்த உருவம் ஏன் ஒவ்வொரு முறையும் எனக்கு இப்படி ஒன்று நடக்கப் போகிறது ஏன் கூறவில்லை.

அப்படி கூறினால் நான் முன்பே இது நடக்காமல் தடுத்திருப்பேன் என்று கூறினார்.அவர் கூறியதை கேட்ட பீட்டருக்கு என்ன கூறுவதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் பீட்டர்..பீட்டருக்கு இவர் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தும் இவராவே நினைத்துக் கொண்டு இவரே கணித்துக் கொள்கிறார் என்றும் பீட்டர் நினைத்தான்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பு நடந்தது என்று அவர்  கூறினார். ஆனால் மீண்டும் இந்த சிக்னல் மேன் ஒரு சில நாட்களாக மீண்டும் இந்த உருவத்தை பார்ப்பதாக பீட்டரிடம் கூறினார்.அப்படி அந்த உருவத்தை பார்க்கும் போதுதான் உங்களையும் பார்த்தேன் என்று கூறினார் சிக்னல் மேன்.இவரை சுற்றி பல அமானுஷியங்கள்  இல்லாத ஒன்றை இருப்பது போன்று கற்பனை செய்து கொள்கிறார் என்று எண்ணிய பீட்டர் அவரிடம் பல விஷயங்களை எடுத்துக் கூறி இப்படிப்பட்ட ஒன்று இல்லை என்றும் இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் கூறினான் பீட்டர். ஆனால் அவர் அப்போ இந்த சிக்னல் மணி  எந்த மணியும் அடிக்கவில்லை  உங்களுக்கு அடிப்பது போன்று உள்ளது. நான் போன இரண்டு நாட்களாக கவனித்தேன் மணி அடிக்காமலேயே அடித்தது போல் வெளியில் சென்று அந்த சிகப்பு விளக்கை பார்க்கும் போது இந்த மணி அடிக்கவில்லை. அதற்கு சிக்னல் மேன் கூறினார் இந்த மணி அடிக்கும் பொழுது ஒரு வித்தியாசமான அதிர்வு ஒன்று ஏற்படும் அது உங்களால் உனர்ந்து கொள்ள முடியாது என்னால் உனர்ந்து கொள்ள முடியும். இந்த அதிர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் அந்த உருவம் கொடுக்கும் அதிர்வு எனக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கு தெரியாது.

ஆனால் ஒரு விஷயத்தை நினைத்து அவர் பயந்து கொண்டே இருந்தார். அந்த உருவத்தை நான் மூன்றாவது முறையாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகிறது ஆனால் அது என்னவென்று தான் தெரியவில்லை.  ஆனால் இந்த பயம் இந்த குழப்பம் அவரை வித்தியாசமான ஒரு ஆளாக மாற்றி இருந்தது.இதை யாரிடம் கேட்பேன் இப்படி ஒன்று நடக்க இருக்கிறது என்று எப்படி என் உயர் அதிகாரிகளுக்கு  தகவல் கொடுத்தா  எங்கே என்று கேட்பார்கள் நான் என்ன பதில் கூறுவேன்.ஆனால் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ன நடக்கப் போகிறது எப்படி நடக்கப் போகிறது ஏன் இதெல்லாம் இந்த உருவம் என்னிடம்  முன்பே  கூறுவதில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவரை பீட்டர் இப்படியெல்லாம் ஒன்று இல்லை நீங்கள் புலம்பாதீர்கள் நான் சொல்கிறேன் கேளுங்கள் என்று சமாதானம் செய்தான் பீட்டர்.

என்னவென்று தெரியவில்லை பீட்டர் கூறியவுடன் அவர் ஏற்றுக் கொண்டார். சரி நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன் இதற்கு என்னதான் வழி என்று கேட்டார். அதற்கு பீட்டர் வாங்க நாளைக்கு நம்ம ஒரு நல்ல மருத்துவரை சென்று பார்ப்போம் இதற்கு அவர் விடை கொடுப்பார். மனிதனின் மனதை சரியான விதத்தில் வைத்திருந்தாலே அனைத்திற்கும் விடை கிடைக்கும் என்று கூற அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்று கூறினார்.

சரியென்று அங்கிருந்து புறப்பட அவரும் வழியனுப்பி வைத்தார்...மறுநாள் பீட்டர் கல்லூரி செல்லாமல் சிக்னல் மேனை சந்திக்க பகலில் சென்றான். அவருக்கு வேலை என்பது இரவில் மட்டும் தான் என்பது பீட்டருக்கு நன்றாக தெரியும் இருப்பினும் பகலில் சந்திக்க சென்றான். பாலம் மேல் நடந்து வந்து எப்பொழுதும் வரும் வழியில் வந்தான் பீட்டர். இறங்கி வரும் பொழுது பீட்டருக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும்காத்திருந்தது. அவர் கூறியது போல் அந்த டனலின் உள்ளே சிகப்பு விளக்கின் அருகில் ஒரு உருவான நின்று கொண்டிருந்தது. பீட்டரால் அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. நான் பார்ப்பது உண்மை தானா அல்லது பிரம்மையா என்ற குழப்பம்.நன்கு உற்று பார்த்தான் ஆனால் அது அந்த உருவம் இல்லை ஒரு அதிகாரி நின்று கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த பீட்டர் அவர் அருகில் சென்றான். பீட்டரைப் பார்த்ததும் பதட்டத்துடன் இருந்தார்.

யார் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டான். நான் அதிகாரி இங்கு வேலை செய்யும் சிக்னல் மேன் நேற்று இரவு ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டார் என்று கூற  பீட்டருக்கு பெரும் அதிர்ச்சி சார் என்ன சொல்றீங்க இங்க வேலை பார்த்த சிக்னல் மேன் அவரா நீங்க சொல்லுறது உண்மை தானா எப்படி சார் என்று கேட்க. அதிகாரி உங்களால் அவரை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டார் அதிகாரி. நிச்சயம் காட்ட முடியும் சார் என்று கூற பீட்டரை டனலுக்குள்ளே அழைத்து சென்றார்.அங்கு ஒரு சடலம் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்து.அதிகாரி மூடி வைக்கப்பட்டிருந்த துணியை விளக்கினார். பீட்டரால் நம்ப முடியவில்லை எப்படி இப்படி ஆனது நான் பார்த்த  நாள் முதல் நேற்று வரை நன்றாக பேசிக் கொண்டிருந்தவர் இன்று என் கண் முன்னே பிணமாக கிடக்கிறார். என்னால் நம்ப முடியவில்லை

எப்படி இப்படி பெரிய குழப்பத்துடனும் வேதனையுடனும் இருந்தான் பீட்டர். இது எப்படி நடந்தது என்று அதிகாரியை கேட்டான் பீட்டர். அதற்கு அவர் நேற்று இவர் வேறு எங்கோ பார்த்தபடி  தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்க இவர் பின்னால் வந்த ரயில் இவர் மீது மோதியதில் இறந்து விட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும் ரயிலின் வேகத்தை குறைக்க முடியவில்லை. வேண்டுமென்றால் ரயிலை ஓட்டி வந்தவரை கேட்டுப் பாருங்கள் என்று அதிகாரி கூறினார்.

ஆமாம் சார் நான் எவ்வளவோ எச்சரித்தும் அவர் தண்டவாளத்தை விட்டு விலகாமல் வேறு எங்கோ பார்த்த படி அங்கேயே நின்று கொண்டிருந்தார்.  நான் இவரை எவ்வளவோ எச்சரித்தும் இவர் விலகவில்லை  என்றார். எவ்வளவோ எச்சரிக்க முயற்சி செய்தேன் என்ற இந்த வார்த்தை பீட்டருக்குள் ஒரு அமானுஷியஉணர்வை ஏற்படுத்தியது பீட்டரும் அந்த ஓட்டுநரை  உற்று கவனித்தான்.அந்த சிக்னல் மேன் கூறிய உருவமும் இவரும் ஒரே மாதிரி இருந்தனர்.

சரி நீங்கள் எப்படி அவரை எச்சரிக்க முயற்சி செய்தீர்கள் என்று பீட்டர் கேட்க. அவர் வலது கையை மேலே உயர்த்தி வலது புறமும் இடது புறமும் அசைத்து ஹலோ இங்க பாருங்க அங்க என்ன பண்றீங்க என்ன பாருங்க என்றேன். ரயில் அவரை நெருங்க நெருங்க அவர் ரயிலில் அடிபட  போகிறார் என்பது எனக்கு உறுதியாச்சு சார். அதனால அவர் அடிபட போறத என்னால் பார்க்க முடியாது என்பதால் என் இடது கையால் முகத்தை மூடிக் கொண்டு வலது கையால் வலது புறமும் இடது புறமும் அசைத்தேன் என்றார். பீட்டருக்கு தூக்கி வாரிப் போட்டது.

அந்த சிக்னல் மேன் முன்பு கூறியதும் இவர் கூறியதும் ஒன்று தான்.ஆனால் சிக்னல் மேன் அந்த உருவத்தை முழுமையாக பார்த்ததில்லை. பீட்டருக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக நின்றான்.கண்களில் கண்ணீரருடன் நின்றான். வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தது பீட்டருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கடைசியில் அவர் கூறிய அனைத்தும் உண்மையா இல்லை அவர் கற்பனையா  என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது இறுதியில் சிக்னல் மேனுடனும் இந்த தண்டாவாளமும்  அவர் கூறியது போல் அமானுஷ்யம் நிறைந்ததாகவே  பீட்டருக்கு விடை தெரியாமல் நின்றது.

You already voted!
2.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 3.22.181.81

Archives (முந்தைய செய்திகள்)