Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பேழைக்குள் சென்ற பேனா

12 Jun 2023 9:17 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures veeramani

கவிஞர் கி.வீரமணி

கவிஞர் விபரம்

பள்ளி கல்லூரி காலங்களில் பள்ளி அளவில் வட்ட ,மாவட்ட , மாநில அளவில் பேச்சு போட்டி கவிதை போட்டி எனப் பரிசுகள் பெற்றவர்.

2013 ஆம் ஆண்டுத் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் பங்கேற்று அன்றைய ஆளுநர் ரோசையா அவர்களின் கரங்களால் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.

பள்ளி படிக்கும் பொழுதே தமிழ் மீதும் தலைவர் கலைஞர் மீதும் தீராத பற்று கொண்டவர்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர்
கொள்கைகளைப் பின் பற்றுபவர் .

சமூக விடுதலை முழுக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக 2017 முதல் செயல்பட்டு வருகின்றார்.

மும்பையில் பொறியியல் தொழில் நிறுவனம் துவங்கி நடத்தி வருகின்றார்.

24-10-2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் திருமணம் நடைபெற்றது

பேழைக்குள் சென்ற பேனா

பேழைக்குள் சென்ற பேனா- வர்க்க
பேதத்தை உடைத்தெறிந்த பேனா
நூற்றாண்டில் ஒற்றை கருணா- எவர்க்கும்
அஞ்சா நா கெஞ்சா செந்நா…!

வெண்தோளில் பதுங்கியிருக்கும் பேனா
எவர்க்கும் கண்டவுடன் அச்சம் வரும்தானா..!
என் எழுத்து தேர்வுக்கு அழுகாத உன் பேனா
என்னை பொறியாளர் ஆக்கியதும்
பேனா எனும் உன் வசந்த சேனா..!

ஒடுக்கப்பட்டோர்
முதுகுதண்டை
நிமித்தியதால்தானா
சிலர் தூற்றுகின்றார் உன்னை
வீணா

வசவர் அறியார்
வர்ணாசிரம வீணர்தனையும்
தேனாய் மாற்றியது
இந்த கலை(கரு)ணா ….என்று…..

இடையை இழைத்து
மார்பில் கறந்து
இன்பம் கொணரும் பேனா…

தொண்நூறு கடந்தும்
துவண்டுபோக நயாகரா
நதி உன் பேனா….

முன்னாளில்
கூனாய் நடந்த தமிழகத்தை
திட்டம்பல தீட்டி
சட்டம்பல இயற்றி
சிற்றம்பலம் ஏற்றிய பேனா…..

சிம்மாசனம் ஏறி
சிம்ம சொப்பனமாய் மாறி
நீ இன்றி வாழ முயலாத பேனா
உன் பேழைக்குள் சென்ற பேனா….

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104910
Users Today : 2
Total Users : 104910
Views Today : 2
Total views : 432070
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)