Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தங்கத் தளபதி

01 Mar 2020 9:16 amFeatured Posted by: Sadanandan

You already voted!

-பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
துணைச் செயலாளர்,
மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகம்,
மகாராட்டிரா

திணித்தோர் மொழிதனையே துரத்திடும் கரத்தோனாய்
வித்தகக் கலைஞரவர் வேட்கை கொண்டிருக்க
அண்ணன் அறிஞரது அடிதனில் சென்றிருக்க
அய்யா பெரியாரின் ஆவல் அனைத்தையுமே

அகிலம் உணர்ந்திடவே ஆக்கிய வேளைதனில்
அரசியல் காழ்ப்புற்று அடிமைப் படுத்துவதை
உரக்க எதிர்த்திட்டு விரைப்பாய் நின்றவரை
ஒடுக்கும் நிலைகண்டு ஓங்கி ஒலித்தோரை

அறியாப் பருவநிலா அறமாய் ஒளிர்வதனை
அறிஞர் அவையொன்று அறியும் தருவாயில்
தெரியா மானிடனும் தெரிந்தே கொண்டிடவே
விதையாம் நன்முத்து விளைச்சல் கொண்டுவர

சிறையில் அடைப்பித்து சிதைக்கும் நிலையொன்று
சின்ன உடலுக்குள் சிதைத்திடும் வலுகொண்டு
சிக்கிய மனங்களினை சேதம் செய்கையிலே
வீரு கொண்டெழுந்து வாடி மயங்கியதை

வந்த நாட்களிலே வெந்த நிலைகொண்டு
செல்லக் குழந்தையுமை சிறைக்குள் அனுப்பிவிட்டு
சிந்தை தொலைத்தோராய் சிங்கம் காத்திருக்க
சின்ன மனதுக்குள் சிக்கிய மனத்தோராய்

அண்ணி அவர்களுமே அன்பில் வெந்திருக்க
உணர்வின் தாக்கத்தில் வெறுப்பை உமிழ்ந்தோரால்
உடலைக் கெடுத்திட்டு உணர்வைப் பெருக்கிட்டு
உலகத் தமிழரது உறவுப் பாலமென

உழைப்பின் வழிதனிலே உயர்வைக் கண்டதனால்
இயக்க மென்றோரின் இனத்தின் அடையாளம்
இவரே என்றதோர் இனிய சூழல்தனை
மறுக்கும் மனத்தோரும் மாலை சூடிடவே

வெறுக்கும் வேற்றானும் வெல்க என்றுரைக்க
வேற்றுச் சிந்தனையை ஒதுக்கி வைத்துவிட்டு
உணர்வு பொங்கிடவே உழைத்த உனைக்கண்டு
மூவேந்த ரெனச்சொன்ன முன்னோர்வரிசையிலே

முன்னேராய் உழுதிட்டு முகம்கனிந்த முத்தோனாய்
மு.க.வின் நன்முத்தாய் முடிசூடும் மன்னவனாய்
தந்தைவழி சென்றோனாய் தகைமையுடன் தம்மவரை
அன்போடு அழைத்திட்டு அறவழியில் செலுத்திட்டு

அய்யன் வள்ளுவனின் அடக்கத்தை மெய்ப்பித்து
அவணி ஆர்ப்பரிக்க அன்புதனை விதைத்ததனால்
வெற்றிக் களிப்பினையே வாரி வழங்கிடவே
வெற்றுப் பேச்சோரும் வாயடைத்துப் போவதற்கு

வெள்ளை மனத்தோனாய் விளைந்த விளைச்சலென
விலகி நிற்போரும் விரைந்து வந்திடுவர்
தரணி போற்றும் தங்கத் தளபதியின்
கையில் கருத்தாகக் கனிதனைத் தந்திடுவர்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

105935
Users Today : 66
Total Users : 105935
Views Today : 104
Total views : 433520
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90

Archives (முந்தைய செய்திகள்)