01 Mar 2025 10:32 amFeatured
மும்பை புறநகர் மாநிலம் சீத்தாகேம்ப் கிளைக் கழகம் நடத்துகிறது
வருகிற 02-03-2025 ஞாயிறு மாலை 6 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக கிளைக் கழக அலுவலகம் முதல் தளம், D-Sector, A3 Lane, Market Road சீதாகேம்ப்பில் வைத்து நடைபெறவுள்ளது.
விழாத் தலைமை
மும்பை புறநகர் மாநிலத் தி.மு.கழகத்தின் பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் கிளைக்கழகப் பொறுப்பாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
சிறப்புரை
மும்பை புறநகர் மாநிலத் திமுக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரை ஆற்றுகிறார். துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரை ஆற்றவுள்ளார்.
படத்திறப்பு
நிகழ்வில் தந்தை பெரியார் திருவுருவப் படத்தை புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், பேரறிஞர் அண்ணா படத்தை இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் மற்றும் இனமான பேராசிரியர் க.அன்பழகனார் திருவுருவப் படத்தை கோரேகாவ் ஆரேகாலணி கிளைக் கழகப் பொறுப்பாளர் சிவக்குமார் சுந்தர்ராஜ் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.
வாழ்த்துரை
மும்பை மாநிலத் திமுகழகப் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி,புறநகர் திமுக துணைச்செயலாளர் அ.இளங்கோ திராவிட கழகத் தலைவர் பெ.கணேசன் , டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை.சோ.பாபு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், திமுகழகப் பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலக்கிய அணித் துணை அமைப்பாளர் வெ.அ.ஜைனுல்லாபுதீன், பொய்சர் மூர்த்தி, அம்பர்நாத் திமுகழகம் தண்டபாணி
மும்பை தி.மு க மேனாள் பொருளாளர் எஸ்.பி.செழியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முன்னிலை
மும்பை மாநிலத் தி.மு.கழக அவைத்தலைவர் வே.ம.உத்தமன், கழக முன்னோடிகள் என்.வி.சண்முகராசன், ஆரே காலனி தர்மலிங்கம், புறநகர் திமுக இலக்கிய அணிப் புரவலர் சோ.பா.குமரேசன்
பீவண்டி கிளைச் செயலாளர் மெஹ்பூப் பாட்ஷா சேக், மும்பை புறநகர் திமுக இளைஞரணித் துணைத் அமைப்பாளர்கள் இரா.கணேசன், கவிஞர் வீரமணி, உதய்குமார் பாலமுருகன், தானே ஜாகீர் உசேன், பிவண்டி கிளை அவைத்தலைவர் முகமது அலி, கல்யாண் கிளை அவைத்தலைவர் .க.ஜீவானந்தம், பாண்டூப் கிளையைச் சேர்ந்த ச.சி.தாசன், மாரி, லல்லுபாய் காம்பவுண்ட் இரா.மதியழகன்,
அம்பர்நாத் கிளைச் செயலாளர் ஜஸ்டின், தானே கிளைச் செயலாளர் பாலமுருகன், முலுண்ட் கிளைச் செயலாளர் எஸ்.பெருமாள், பிவண்டி கிளைப் பொருளாளர் முஸ்தாக் அலி வாஷி கிளைக்கழகச் செயலாளர் பழனி, சயான் கிளைக் கழகம் சி.சுடலையாண்டி, ஜோகேஸ்வரி கிளைச் செயலாளர் தமிழினநேசன், ரமேஷ், வாஷி கிளை சார்ந்த ஆறுமுகம், தில்லை, எம்.ஈ.முத்து, டி.சங்கர், குலசேகரன், ஜி.பசுபதிநாதன், தமிழர் நட்புக் கழகத் தலைவர் மா.கதிரவன்,
முலுண்டு கிளை அப்துல் லத்தீப், சங்கரசுப்பு, பன்வேல் கிளைக் கழகம் சுஃபி, ஆரே காலணி பாண்டு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நன்றியுரை
நிறைவாக சீத்தாகேம்ப் கிளை உறுப்பினர் மூர்த்தி நன்றியுரை ஆற்றவுள்ளார். கழக உணர்வாளர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து மகிழும்படி சீத்தாகேம்ப் கிளைக் கழகத் தோழர்கள் அழைக்கிறார்கள்.
Viza sirapudan nadaipera Vazthukkal
Congratulations