Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழின் பழமையும் தமிழி எழுத்துருவும்

03 Mar 2025 11:37 pmFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!

          தமிழி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட  ஒலிப்பியல் எழுத்து முறைமையும் தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும்.  இது தெற்கு ஆசியாவில்   பயன்பாட்டில் இருந்த அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் சில  எழுத்து முறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தையது ஆகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள்,  நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.    தமிழி எழுத்துக்கள் தோன்றிய காலம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த எழுத்துக்கள் கி.மு. 2000 என காலம் கணிக்கப்பட்டது.   சில ஆரம்ப கால எழுத்துமுறைகள் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய பல பிராமி எழுத்து முறைகளுள் தமிழ்ப் பிராமி பட்டிப்புரலு எழுத்துமுறைக்கு நெருங்கியதாயுள்ளது. தமிழ்ப் பிராமி வழமையான பிராமியிலிருந்து வேறுபடுத்திக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எழுத்துமுறை தமிழர்களின் ஆரம்ப வரலாற்றுடனும், சங்க இலக்கியம்   போன்ற இலக்கிய உருவாக்கத்திலும் பயன்பட்டுள்ளது. .

பொ.ஊ.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கொற்கையில் நடந்த அகழாய்வின்படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானையோடு ஒன்றும் கிடைத்தது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் பொ.ஊ.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டு கால தென்னாசிய ஆரம்ப சான்றுள்ள சாசனங்கள் அனுராதபுர அரணில் கண்டுபிடிக்கப்பட்டன. பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.ஊ.மு. 5ம் நூற்றாண்டு கால சாசனம் மற்றும் சில சாசனங்கள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அசோகருக்கு பிற்பட்ட பரவல் பற்றி ஐராவதம் மகாதேவன் உருவாக்கப்பட்ட கருத்து அனுராதபுர கண்டுபிடிப்பினால் புறக்கணிக்கப்பட்டது

கொடுமணலில் கீழ்மட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பொ.ஊ.மு. 4ம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்குரியது என பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கீழ்மட்ட மட்பாண்ட ஓடு தமிழுக்குரிய எழுத்துக்களையும் "m" போன்ற வேறுபட்ட தொல்லெழுத்தியல் வடிவத்தினையும் கொண்டிருந்தது. ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாகப் பின்னர் உருமாறின.  பழனி அருகே பிராமி எழுத்து அடங்கிய பொருட்களுடன் இருந்த தாழி கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது. அதன் காலத்தை அமெரிக்க நிறுவனம் பொ.ஊ.மு. 490 என்று கணித்துள்ளது

எகிப்து: எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் பொ.ஊ.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் "பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  பொ.ஊ.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

தாய்லாந்து: பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் பொ.ஊ.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஓமன்: ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை: பொ.ஊ.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன. பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன.தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் (Tissamaharama) தமிழி (தமிழ்ப் பிராமி) மட்பாண்டச் சாசனம். ‘திரளி முறி (அ) புலைத்தி முறி’ என்று அறிஞர்களால் படிக்கப்படும் இந்த வரிவடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நாம் வடமொழி என்றாலே சம்ஸ்கிருதம் என்று எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், சமஸ்கிருதம் தான் அதிகம், தமிழைச் சிதைக்க முற்பட்டது. பிராகிருதம் அப்படிச் செய்யவில்லை. இன்று சம்ஸ்கிருதம் எழுதப்படுகின்ற வரியுரு, தேவநாகரி வரியுரு. இதே தேவநாகரியில் தான்,  பல வட இந்திய மொழிகளும் எழுதப்படுகின்றன. சம்ஸ்கிருத மொழியை,  தேவநாகரி வரியுருவில் எழுதத் தலைப்பட்ட காலம், கிட்டத்தட்ட 1000 CE-க்குப் பின் தான். பதினோராம் நூற்றாண்டின் உதயகிரிக் கல்வெட்டுகள் (மத்தியப் பிரதேசம், விதிஷாவுக்கு அருகிலுள்ள 20 குடைவரைகள்), சம்ஸ்கிருத தேவநாகரிக்குச் சான்று பகர்ந்தாலும், அந்த வடமொழி, பிராகிருதமே அன்றி, சம்ஸ்கிருதம் அல்ல!  சம்ஸ்கிருதம் எழுதுவதற்கு தேவநாகரியே நிலைத்து நின்றது!  அதற்கு முன்பு, பிராகிருத மொழிக்கான நாகரி வரிவடிவமும், குப்த வரிவடிவமும் தான் எழுதுவதற்கு!  அவற்றுக்கும் முன்பு, அசோக பிராமி என்ற வரி வடிவமும், பிராகிருத மொழித் தொன்மத்துக்கே அதிகம் சான்று பகர்பவை. சம்ஸ்கிருத மொழிக்கு அல்ல!   

சம்ஸ்கிருதம், வேத காலச் சம்ஸ்கிருதம்/ பின்னாள் சம்ஸ்கிருதம் என்று இரு வேறாகச் சொல்லப்பட்டாலும், வேதங்கள் எழுதப்படாமல், வாய்வழியாகவே சொல்லப்படவேண்டும் என்ற மரபில் விளைந்தவை. அதனால் தான் ‘எழுதாக் கிளவி’ என்றொரு பெயரும் அதற்குண்டு.

          வேதங்களை, ஸ்ருதி (श्रुति) என்பதும் அதனால் தான். ஸ்ருத் என்றால் கேட்கப்படுவது. எழுதி வைக்கக்கூடாது. (ஸ்ருதிஸ்து வேதோ விக்னேயஹ);  ஸ்ரவணம் என்பதும் அதன் அடியொட்டி வருவதே (ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ, ஸ்மரணம் பாத ஸேவனம்). இப்படி எழுதப்படாமல், செவி/வாய் வழியாகவே வந்தவை ஆதலால், அவற்றின் தொன்ம நிறுவல்கள் யாவும் ஊக அடிப்படையில் மட்டுமே!  இனிமேலும் எழுதி வைக்காமல் போனால், தங்களின் மரபு அடியோடு அழிந்துபடும் என்பதாலும், எழுதாக் கிளவியில் இருந்து, எழுதும் கிளவிக்கு குப்தர் காலத்தில் மாறினார்கள்.

  • பிராகிருதம் (प्राकृत) = பிர+கிருதம் (Raw Form);
  • சம்ஸ்கிருதம் (संस्कृत) = சம்ஸ்+கிருதம் (Refined Form)

இம் மொழிகளின் பெயர்களே, இவற்றின் தொன்மங்களை ஓரளவு காட்டிக் கொடுத்து விடும். மக்களிடம் Raw ஏற்பட்ட பின்னரே, பண்டிதர்களிடம் Refined ஆகும். அதான் உலக இயற்கை.

சொல்லப் போனால், காளிதாசரின் மஹா காவ்யமான சாகுந்தலத்தில், பொதுமக்கள் & பெண்கள் (கீழ்க்குடிகள்) பிராகிருத மொழி பேச, அரசவைப் பண்டிதர்கள் (மேல்குடிகள்) சம்ஸ்கிருத மொழி பேசுவதாக, அவரே தம் நாடகத்தில் காட்டுவார்.

பிராகிருதம், மக்கள் மொழியாக இருந்ததினால் தான், அதிலேயே தங்கள் கருத்துக்களைப் பரப்பினார்கள். இன்று வடமாநிலங்களில் பரவியுள்ள பல மக்கள் மொழிகளுக்கு (ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ஒடியம், மகாராட்டிரம், இன்னும் பல) மூலம்: பிராகிருதமே அன்றி, சம்ஸ்கிருதம் அல்ல! பாளி, செளரசேனி, மகதி, அர்த்த மகதி, அவந்தி, காந்தாரி, மகாராட்டிரி என்று அந்தந்தப் பகுதிக்கேற்ப விளைந்த பிராகிருத மொழிகளே, மக்கள் மொழிகள் ஆகின. பின்னாள் குப்த காலத்தில் தான், வேத மரபுகள் -> புராண மரபுகளாய் மாறத் துவங்கிய போது, எழுதாக் கிளவி -> எழுதும் கிளவியாய், எழுத்தாக்கம் நிறைய உயிரூட்டப்பட்டு, குப்த வரிவடிவத்தையும் பிராமி வரிவடிவத்தையும் சம்ஸ்கிருதம் அரவணைத்துக் கொண்டது; அதுவே நாகரி/ தேவநாகரி என்றும் பின்னாளில் தொடர்ந்தது.

தமிழுக்கு இந்தச் சிக்கல் இல்லை! ஆதி எழுத்து ஆவணங்கள் (Earliest written accounts) தமிழுக்கே அதிகம் கிட்டுகின்றன! மேலும், தமிழுக்கென்று தனித்த வரிவடிவங்கள் உண்டு. தமிழி (தமிழ்ப் பிராமி), அசோக பிராமியினும் வேறுபட்டது; பின்னாள் வட்டெழுத்து, கோலெழுத்து என்று, இன்றைய வரிவடிவம் வரை, தமிழுக்கான எழுத்து தனித்தன்மை உடையது. பிற வடிவங்களைச் சாராதது.

கீழடியில் 3.53 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட 6 பதக்கூறுகள் (Sample), Accelerator Mass Spectrometry (AMS) கால ஆய்விலே, தமிழி எழுத்து வரிவடிவத்தினை 580 BCE-க்கும் முன்பு இட்டுச் செல்கின்றன. 6 th century BCE என்பது, இதுவரை எந்த இந்தியத் தொன்மொழிக்கும் கிட்டாத அறிவியல் ஆவணச் சான்றாகும்!  அதுவும், சடங்குச் சான்றாக இல்லாமல், நேரடியான எழுத்தாவண வரிவடிவச் சான்றாகும்!

தமிழ்மொழி, சம்ஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று சொல்வதற்கு இது போன்ற எழுத்துத் தரவுகள் தான் முதற்புள்ளி! ஏனெனில், ஒரு மொழி, தன்னை எழுதுவதற்கு, சம்ஸ்கிருதம் போல் சொந்த வரிவடிவங்கள் ஏதுமின்றி, தன் நேரடியான எழுத்து முறையெல்லாம் தொலைத்து, இவ்வளவு திண்டாட வேண்டிய தேவையில்லையே! அஃதொன்றே, சான்று பகர்ந்து விடும், தொன்மையின் கூறுகளை!

தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்துக்கும் மூத்து விளங்கும் சிந்து சமவெளி எழுத்துக்கள் (Indus Script), தொல்தமிழ் (அ) Proto Dravidian தான், என்று இன்னும் தீர்மானமாக முடிவு செய்யப்படவில்லை. படுகைக் குறிகள்/ படவெழுத்து (hieroglyph) ஆய்வுகளின் மூலமாக, Asko Parpola, Kamil Zvelebil, ஐராவதம் மகாதேவன், Yuri Knorozov போன்ற பலப்பல உலக அறிஞர்கள், சிந்து சமவெளி வரிவடிவக் கூறுகள், திராவிடமொழிக் குடும்பத்தின் தமிழ் வடிவமே என்று ஆய்ந்து உரைத்தாலும், அதற்கான மேலதிகத் தரவுகளை, இன்னும் அறிஞர்கள் தேடுகின்றார்கள். அந்த ஆய்வுகளின் நிறைமுடிபும் வந்து சேர்ந்து விட்டால், தமிழ்த் தொன்மவியல் உலக அரங்கில் வலுவானதொன்றாகி விடும்! சிந்து சமவெளி நாகரிகம், Bronze Age என்பதால், 3000-2000 BCE வரை கூடச் செல்ல முடியும்!

சிந்து சமவெளி இன்னும் ஆய்வில் உள்ளதால், கீழடி தான் இப்போதைக்குத் தமிழ்மொழிக்குக் கிட்டக் கூடிய (Earliest Written Account) உச்சநிலைத் தொன்மச் சான்று! 6th Century BCE. அடுத்து வரும் தொன்மச் சான்றுகளையும், வரிசையாகக் காண்போம்.

1. முதன்மையான சான்று, ஈழத்தில் (இலங்கையில்) கிட்டுகிறது. ஆனைக்கோட்டை முத்திரை என்ற எழுத்தாவணம். அது 4th Century BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்து ஆனைக்கோட்டையில், பெருங்கற்காலப் (Megalithic) புதைகுழித் திட்டு ஆய்வுகளின் போது, மண்டையோட்டு அருகே மண்பானைகளில் கிட்டியது. “கோ-வே-த” என்று தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணம், கோவந்து/ கோவேதன்/ திவுகோ என்று அறிஞர்களால் பலவாறாகப் படிக்கப்படுகிறது.

2. பொருந்தல் என்றொரு தொல்லியல் களம். இது தமிழ்நாட்டின் பழனிமலை அருகில். கருப்பு-சிவப்பு மட்கலங்களில் கிட்டிய நெல்மணிகள், Accelerator Mass Spectrometry ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 490 BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, தமிழி (தமிழ்ப் பிராமி) வரிவடிவத்தின் காலம், 5th Century BCE என்ற சான்றையும் அளித்து, தமிழ்ப் பிராமி அசோக பிராமிக்கு (3rd Century BCE) 200 ஆண்டுகளுக்கு முன்பே, என்ற நிறுவலுக்கும் வழிவகுக்கின்றது.

3.   மதுரையின் அருகில் மாங்குளம் என்ற தொல்லியற்களம். இங்கு, சங்க காலக் குகைக் கல்வெட்டுக்களை, Robert Sewell 1880களிலேயே கண்டு பிடித்தார். பாண்டியன் நெடுஞ்செழியனின் பணியாளர்கள் (கடலன் வழுதி), சமண முனிவர்களுக்குக் கற்படுக்கைகள் செய்து கொடுக்கும் தகவல்கள், இதில் கிட்டுகின்றன. தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களில், சமணம் தொடர்பான பாளி மொழிச் சொற்களோடும் சேர்ந்து கிடைக்கும் அரிய கல்வெட்டு இது. இதன் காலம், 3rd Century BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது.

4.  கொடுமணல் என்ற தொல்லியல் களம், ஈரோடு/சென்னிமலைக்கு அருகில். அங்கும், தமிழ் வரிவடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இலக்கியச் சங்கத் தமிழுக்கும் அறிவியல் சான்று தரும் களம். கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இத் தொழில் நகரம் தான், சங்கத்தமிழ் பதிற்றுப்பத்து நூலிலும் வருகிறது;

5 ரோமாபுரிப் பொற்காசுகளும் இங்கு கிடைத்துள்ளன. இரும்பினை எஃகு ஆக்கும் உருக்குத் தொழில்நுட்பமும், அதற்கான கருவிகளும் இங்கே கிட்டியுள்ளன. நொய்யல் ஆற்றங்கரை நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் இந்த அகழாய்வில், முதுமக்கள் தாழி மட்டுமல்லாது, வாழும் நாகரிகப் பொருட்கள் ஒருசேரக் கிடைத்துள்ளன. ஈட்டி முனை, வாள், இரும்பு உருக்கு, ஒப்பனை வளையல், தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டம் என்று பலவும் கிட்டியதோடு மட்டுமன்றி, பண்டைய ரோமாபுரி தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்த Beryl கற்களும், இங்கிருந்தே! Be₃Al₂Si₆O₁₈ என்று அறிவியலில் சொல்லப்படும் Beryllium Aluminium Cyclosilicate, அணிகல அருங்கற்களான emerald, quartz, aquamarine போன்றவையும் கொடுமணல் வணிகச் சந்தையே. இதன் காலம், 2nd Century BCE என்று கணக்கிடப்பட்டுள்ளது.

6.   கோவைக்கு அருகில் பெரியதடாகம் பகுதியில், சுடுமண் தாங்கிகள் தமிழி (தமிழ்ப் பிராமி) எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளன. “தவ சாத்தன்” என்று எழுதப்பட்டுள்ள இவையும் 2nd Century BCE என்றே கணக்கீடு.

7.  ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி  (ஜம்பைக் கல்வெட்டு}:

     (Jambai_Tamil_Brahmi) Tamil Brahmi inscription in jambaimalai)  

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் அமைந்த குகைத்தளத்தில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளால் வெட்டப் பட்ட கல்வெட்டு ஒன்று அதியமானைப் பற்றியதாகும். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி மாணவரான கே.செல்வராஜ் தனது கள ஆய்வின்போது இக்கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்.

மேலே குறிப்பிட்ட அத்தனை களங்களையும் ஆவணங்களையும் பொருத்திப் பாருங்கள்; ஒன்று கூடச் சம்ஸ்கிருதச் சான்றுகள் போல், 1 st Century BCE அல்ல! எல்லாம் அதற்கும் மிக மிக முந்தியவை; 6th Century BCE வரை செல்கின்றன! (600 BCE – 200 BCE).

ஆனால், சமஸ்கிருதத்திற்கு கிடைக்கும் நேரடிக் கல்வெட்டுச் சான்றுகளான கோசுண்டி-ஹதிபாடா கல்வெட்டு கூட, 100 BCE மட்டுமே; அதுவும் மொழிச் சான்றாகக் கிட்டாமல், அஸ்வமேதச் சடங்குச் சான்றாகத் தான்; அதுவும் நேரடிச் சம்ஸ்கிருத எழுத்து வரிவடிவத்தில் அல்ல; பிராகிருத அசோகப் பிராமியின் வரிவடிவத்தில் தான்; தமிழி (தமிழ்ப் பிராமி) போல் தனி எழுத்தில் அல்ல!

இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின், பூர்வ குடிகளின், மண்ணின் தாய் மொழிகள் இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி உத்திரப்பிரதேச பிரஜ் பாஷா, புந்தேல்கண்டி, போஜ்புரி ஆவ்தி  கன்னோஜி, உத்ராகாண்டின்   தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி ஹரியானா மாநிலத்தின் ஹரியாண்வி, ராஜஸ்தானி யின், மார்வாரி, மேவாரி,  மத்திய பிரதேசத்தின்  மால்வி, நிமதி, அவதி, பகேலி, காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி, சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி, சந்த்தலி, மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை  வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.

இந்தி மொழி 19-ம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. இந்தி இயற்கையாகத் தோன்றிய மொழி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

முகலாயர்கள் ஆட்சி காலத்தில், உருது மொழியையே ஆட்சி மொழியாக வடநாட்டில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தினர். முகலாயர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தபின் உருது மொழிக்கு எதிராக ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த இந்துஸ்தானி மொழிகள் என்று அழைக்கப்படும் மற்றும் பிராகிருதம் மொழி வழி வந்த கடிபோலி, ஆவாதி, போஜ்பூரி, உருது போன்ற மொழிகளுடன் சமஸ்கிருதத்தை கலவை செய்து இந்தி மொழியானது செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு வட இந்தியாவில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திணிக்கப்பட்டது. இந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது.    

இந்தியாவின் முதல் மாநிலமாக பீகார், 1881 இல் உருது மொழிக்குப் பதிலாக ஹிந்தியை தனது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக மாற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இந்தி ஆனது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, செப்டம்பர் 14 ஆம் தேதியை இந்தி திவாஸ் என்று கொண்டாட முடிவு செய்தார். மேலும், தேவநாகரி எழுத்துக்களில் (தேவநாகரி லிபி) இந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதில் முக்கிய பங்கு வகித்த பியோஹர் ராஜேந்திர சிம்ஹாவின் பிறந்த நாளான (செப்டம்பர் 14, 1916) இன்று இந்தி திவாஸ் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.  

          இந்தி மொழி எழுத்துகள் தேவநாகரி எழுத்துக்களில் இருக்க வேண்டும் என் அங்கீ கரிக்கப்பட்டது இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் தான். ஆனால் தமிழ் மொழி பேசும் மொழியாக, எழுத்துரு மட்டுமல்ல இலக்கணம், இலக்கியம் கண்ட மொழி. ஆண் பால் புலவர்கள் மட்டுமல்ல பெண்பால் புலவர்களும் புகழ்ந்து பாடிய மொழி, முச்சங்கம் கண்ட மொழி. வெளிநாடுகளில் வாணிபம் தொடர்பு கொண்ட மொழி. இத்தகைய பெருமை கொண்ட மொழியை நேற்று தோன்றிய மொழியால் சிதைக்க விடலாமா? ஒரு மொழி அழிந்தால் தமிழ் இனமே தன் எதிர்காலம் இழக்குமே !

           இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய்மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன. ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக பேசப்படுவதோடு சரி. கல்வி நிலையங்களில் கூட கற்பிக்கப்படுவதில்லை.  மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி அடைந்த்துள்ளதா என்றால் இல்லை. இருமொழி கொள்கையை கடைபிடிக்கும் தமிழ்நாட்டை விட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.   மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு இந்தியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மாநிலங்களிலாவது அக்கொள்கையை வலியுறுத்துகிறதா என்றால் இல்லை. இந்தி கற்றிருந்தால் தமிழ்நாடு இன்னும் முன்னேறியிருக்கும் இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்க வைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள். 

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டின் கல்வி நிதியை ஒதுக்குவோம் என்ற வஞ்சனை எண்ணம் கொண்ட ஒன்றிய அரசே தமிழ்நாட்டின் உரிமையை மறுக்காதே! கல்வி அறிவு வளர்ச்சியை தடுக்காதே!!

𑀢𑀫𑀺𑀵𑀺    𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑀼 𑀭𑀼    𑀅 𑀶𑀺𑀯𑁄𑀫𑁆

𑀓 𑀭𑀼 𑀯𑀽 𑀭𑁆   𑀇𑀭𑀸.   𑀧𑀵𑀷𑀺𑀘𑁆𑀘𑀸𑀫𑀺                                 கருவூர் இரா. பழனிச்சாமி

𑀦𑀷𑁆𑀶𑀺 :  𑀆𑀢𑀺𑀦𑀸𑀢  𑀢𑀫𑀺𑀵𑁆  𑀧𑀺𑀭𑀸𑀫𑀺                    நன்றி : ஆதிநாத தமிழ் பிராமி

நன்றி :  Dr. Kannabiran, Ravishankar, KRS,   Professor (Adjunct)/ Investment Banker  

Google   

******

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
R. Babu Kirubanithi
R. Babu Kirubanithi
4 months ago

Very informative. The Tamil Vowels and consonant systems have been copied by theDevanagari script .In Tamil the vowels are phonological whereas in Sanskrit the vowels znd consonants are phonetical. Sanskrit means refined or cultured etymologically
.

Sadanandan
Editor
Reply to  R. Babu Kirubanithi
4 months ago

Thank you Very much Sir
for visiting our website and your kind feedback.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102634
Users Today : 1
Total Users : 102634
Views Today : 1
Total views : 428067
Who's Online : 0
Your IP Address : 18.97.14.82

Archives (முந்தைய செய்திகள்)