01 Mar 2021 12:39 pmFeatured

-வெங்கட் சுப்ரமணியன்
டோம்பிவிலி,
வேரூன்றிய இயக்கத்தின்
வளமைதனை பொறுக்காது
சொல்லம்பு எய்வோரை
சந்திக்கும் கேடயமாய் .….
பேரறிஞர் நட்ட விதை
ஊரறிந்த கலைஞர்
உரமிட்ட இயக்கம்
முன்னெடுத்து செல்கின்றாய்
முப்படைத் தளபதியாய்….
அரசின் இயலாமையால்
அமைக்கும் கிராமசபையில்
மக்கள் மனதறிந்து
மருந்திடும் மருத்துவனாய்….
போற்றுவோர் போற்ற
தூற்றுவோர் தூற்ற
கட்டுப்பாட்டு கண்ணியத்துடன்
கடமை செய்யும் காவலனாய்….
வழி வழி வந்த
மொழி போற்றும் கடமை
உயிரினும் மேலாய் காத்திடும்
உண்மைத் தமிழனாய்…
அகவை அறுபத்தெட்டிலும்
அயராது உழைத்துவரும்
புயலுக்கு மூப்பில்லை
அது
சுழன்று வரும் இளமை..
தெற்கத்து சூரியன்
திராவிடர் முன்னேற்றம்
எத்திக்கும் புகழ்பரப்ப
என்றென்றும் வாழ்த்துகிறோம்.






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37