25 Sep 2020 11:14 amFeatured

கடந்த மாதம் 5 ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் கவலைக்கிடமாக இருந்த அவர் பின்னர் குணமானார்
இந்நிலை நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு வருமாறு எஸ்.பி.பி. குடும்பத்தாரை மருத்துவமனை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.
எஸ்.பி.பி. உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு எக்மோ, மற்றும் அதிகபட்சமாக உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. முன்னதாக அறிக்கை வெளியான உடன் நடிகர் கமல் ஹாசன் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கே அவர், மருத்துவர்களிடம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கவலை அதிகரித்தது
இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் அவர் குணமடைய பிரார்த்தித்து வருகிறார்கள். இதுபற்றி பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண உடல்நலத்துடன் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். எனக்காக பாடிய ஒவ்வொரு பாடலுக்காகவும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.






Users Today : 8
Total Users : 108821
Views Today : 8
Total views : 436857
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150