Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2 கோடியே 5 லட்சம் பேர் கையெழுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிவைப்பு

17 Feb 2020 1:40 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சி. , என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்த வலியுறுத்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8ஆம் தேதிவரை  நடைபெற்றது. இந்தக் கையெழுத்து இயக்கம் முதலில் ஒரு கோடி பெறுவது என்று திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், மக்கள் தாங்களாகவே முன்வந்து மத்திய பா.ஜ.க. அரசின்குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டதால் இரண்டு கோடியை(2,05,66,082) தாண்டி,இந்தியாவிற்கே திமுக தலைவர் அவர்களின் முயற்சியால் தமிழகமே முன்மாதிரியாக திகழ்கிறது.

இச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, பெறப்பட்டஇந்த
2 கோடிக்கு மேற்பட்டகையெழுத்துப் படிவங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்கள் நேற்று காலை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலை முன்பு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத்திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்" நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப்படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - மேதகு குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்துஅளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்று 24.1.2020அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் இயக்கமான “கையெழுத்து இயக்கத்திற்கு" அனைத்துத்தரப்பு மக்களும், தங்கள் பேராதரவினை வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் கூட்டம் வேண்டுகோளும் விடுத்தது.

தொகுதியில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

இதன் அடிப்படையில் கடந்த 2ஆம் தேதி அன்று கொளத்தூர் தொகுதியில் திரு.வி.க. நகர்,ஜி.கே.எம். நகரிலும், 4 ஆம் தேதிஅன்று சென்னை மேற்கு மாவட்டம்,தேனாம்பேட்டையிலும், 5 ஆம் தேதி அன்று சென்னை தெற்கு மாவட்டம், நந்தனத்திலும், 6 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கோவளத்திலும், 7 ஆம் தேதி சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்துத் தரப்பு மக்களிடமும் கையெழுத்து இயக்கப் பதிவேட்டில் கையெழுத்துப் பெற்றார்.

8ம் தேதி கையெழுத்து பெற்று நிறைவு

பிப்ரவரி 2 ஆம் தேதி கையெழுத்து இயக்கத்தைதொடங்கி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்கள் நிறைவு நாளான 8 ஆம் தேதி அன்று காலை திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திலும் மாலை சென்னை கிழக்கு மாவட்டத்திலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று நிறைவு செய்தார்.

2 கோடி கையெழுத்து! விமானம் மூலம் அனுப்பி வைப்பு!

இதே போன்று, அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும் – வணிக நிறுவனங்களிலும் - கல்வி நிலையங்களிலும் - வீடு, வீடாகவும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களிடமும் 2020பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கையெழுத்து பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்களை; நேற்று (16.2.2020) காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா -முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகில்,திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய அனைத்துக்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் மேதகு குடியரசுத் தலைவருக்கு  விமானம்மூலம் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைமுருகன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணைச்செயலாளர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபுபக்கர் எம்.எல்.ஏ.,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சென்னை மாவட்டத் தலைவர் இசைபாலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசியமக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார்! தமிழக மக்கள் நம்பிக்கை!

ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து - இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப் பெற்றும் -என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணி களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஜனநாயகத்தையும் – அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அறிவுரையை வழங்கிடுவார் என்று தமிழகமேஆவலுடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092649
Users Today : 27
Total Users : 92649
Views Today : 33
Total views : 410392
Who's Online : 0
Your IP Address : 3.22.77.117

Archives (முந்தைய செய்திகள்)