14 Mar 2021 5:19 pmFeatured

-கவிஞர் இரஜகை நிலவன்
உயிரினும் இனிமை இந்த பெண்மை.
உள்ளத்து சுவைக்கு
என்றும் இனிமையே
என்றும் எதிலும்
இளமை கலந்ததிந்த
காவிய பாரதப்புதுமைப் பெண்மையே….
மாதவம் செய்த
வற்றாத தீஞ்சுனையாம்
குற்றாலத் தேனருவியே…
பெரும் பயன் பெற்ற
விண்ணின் விண்மீன் குழுவில்
விழிகளால் விளக்கேற்றி
பழிகளைத்துடைத்திங்கே
வழிகளைத் திறந்திட
மொழிகளை யாழினில்
வழி மொழிந்திடும்
தோழியாய் தூதுரைக்கும்
பாவையின மாமடந்தையே…
அருந்தவம் செய்த
பெருந்தவப்பிராட்டி..
தென்றலைத் தோய்த்தெடுத்து
மன்றத்திற்கு வந்த
வென்றகத்தின்
அணிசெய்பவள்
அன்றலர்ந்த மலர்
முகமலர்ச்சி எங்கும்
சென்றமர்ந்திட
பண்ணிசைக்கும்
குயிலின் கூட்டத்தில் பாங்கோடிணைந்த
ஆரணங்கின்ஆவணத்தோன்றலிவளே..
ஆதவனின் ஒளியில் திங்களாய்
அகல் விளக்கேற்றும்
வெண்ணிலவின்
தங்கையே
காவேரியில் விளையாடி
கங்கையில் உலர் தலை முடித்து
பிரம்மபுத்ராவிற்கு
தூதனுப்பி சுகந்தம்
சுமந்த தென்றல்
அகந்தமதில் கொண்ட அல்லி
மலர் கொண்டையில்
சூடிய-வண்டாட்டம்
கண் கொண்டே சூடிக்கொடுத்த
ஆண்டாளின்
வழித்தோன்றலே…
கற்பிற்கிலக்கணம்
கற்பித்திட வந்த
அன்பிற்கிக்கிலயமாய் - சிற்பங்கள் படைத்திட்ட
நாற்பதின்மாயிரமாய்
சொற்புதிரின்
அற்புதத்தின்
நற்புதிரே…
உயிரினும் இனிமை இந்த பெண்மையே…






Users Today : 64
Total Users : 105933
Views Today : 102
Total views : 433518
Who's Online : 1
Your IP Address : 18.97.14.90