04 Oct 2020 1:30 pmFeatured

மும்பை மாநகராட்சி ஆரே காலனி தமிழ் பள்ளி-2 ன் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவந்த நல்லாசிரியர் விருது பெற்ற பொற்செல்வி கருணாநிதி அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா ஆரேகாலனி பள்ளிவளாகத்தில் 30.09.2020 அன்று நடைபெற்றது.
மாநகராட்சி உறுப்பினர் ரேகா தாய் தலைமை தாங்க, பொறுப்பாசிரியர் சுசீலா இன்பமணி வரவேற்புரையாற்றினார்.
ஆசிரியர்கள் சுந்தர்சிங், தல்வி, புஷ்பாமேரி சந்திரசேகர், பொம்மி ரவீந்திரகுமார், செல்ல்வி கேபிரியல், விஜயா கணேஷ்குமார், சுதா சாலமன், சாவித்திரி பாண்டே, ராஜேந்திர பராத்தே, கம்பன் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை ஆசிரியை பொற்செல்வி கருணாநிதி அவர்களின் 40 ஆண்டுகால பணியை போற்றியும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் ஆற்றிய நற்பணியையும் எடுத்துரைத்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
தலைமை ஆசிரியை பொற்செல்வி கருணாநிதி தனது ஏற்புரையில் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியற்களுக்கு ஆசிரியர்களாக மட்டுமின்றி தாயுள்ளத்துடன் அன்புடன் வழிநடத்தவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
இறுதியில் தலைமை ஆசிரியை பொற்செல்வி அவர்களின் கணவர் கருணாநிதி அவர்கள் அனைவருக்கும் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150