02 Dec 2023 9:37 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் தாயார் நல்லடக்கத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உட்பட திமுக பிரமுகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளரும், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினருமான அலிசேக் மீரான் அவர்களின் தாயாரும், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் அரசியல் பயணம் செய்த மறைந்த அலிசேக் மன்சூர் அவர்களுடைய மனைவியுமான அலிபாத்து அம்மையார் 01.12.2023 வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் காலமானார்.அன்னாரின் நல்லடக்கம் 02.12.2023 மாலை 4 மணிக்கு நடைபெற்றது
அந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன். மைதீன் கான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா,

தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில விவசாய தொழிலாளர் அணி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் பி சி ராஜன்,செல்வ கருணாநிதி, ஜோசப் பெல்சி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், நெல்லை பகுதி செயலாளர் கோபி, நெல்லை மாநகர துணை செயலாளர் அப்துல் கையும், இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் மும்பை சு.குமணராசன், நங்கை குமணராசன்,

மும்பை பிவாண்டி முஹம்மது அலி, நகர செயலாளர்கள் கணேசன், மணி சூரியா, பேரூர் செயலாளர்கள் அயூப்கான், கசமுத்து நெல்லை மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீரான், நெல்லை மாவட்டம் முஸ்லிம் லீக் தலைவர் மீரான், ஏர்வாடி திமுக பிரமுகர் அசன் மீரான், நெசவாளர் அணி பீர் முகமது, மாவட்ட பிரதிநிதி கல்வத், மீரா சாகிப், வழக்கறிஞர்கள் அருள் செல்வன் ,சேவியர் மோசே, பாஞ்ச் சேக்,சாஜித்,

மற்றும் ஊர் ஜமாத்தார்கள், வியாபார பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.






Users Today : 76
Total Users : 108812
Views Today : 83
Total views : 436848
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150
Ŕest in peace