04 Oct 2023 3:01 amFeatured

கலைஞருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தும் தீர்மானம்
கடந்த 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை மும்பையின் நவிமும்பை தமிழ்ச் சங்கத்தில் வைத்து காலை 10 மணிமுதல் மாலை வரை கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு எழுச்சிமிகு வடிவில் நடைபெற்றது.
திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், மும்பை தமிழ் இலெமூரியா அறக்கட்டளை, ஔவைக்கோட்டம் திருவையாறு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு மாநாட்டுப் பேருரை ஆற்றினார்.

புத்தகக் கண்காட்சி மகளிர் அரங்கம், இசையரங்கம், நாட்டியரங்கம் கருத்தரங்கம் கவியரங்கம் விருது வழங்கும் நிகழ்வு, பட்டிமன்றம் எனப் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய பிரமாண்டமான இலக்கிய மாநாடாக மும்பையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞரின் புகழுக்கு காரணமாக விஞ்சி நிற்பது இன மீட்சியே ... மொழி மாட்சியே...
என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தினை தமிழ்நாடு அரசு இ.எஸ்..ஐ.மருத்துவமனைகளின் இயக்குநர் நற்றமிழ் நாயகர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி நடுவராக இருந்து நடத்திக் கொடுத்தார்.

மாநாட்டுப் புரவலர் அலிசேக் மீரான் நிகழ்வுத்தலைமை ஏற்று நடத்தினார். மாநாட்டு இயக்குநர் முனைவர் மு.கலைவேந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ் இலெமூரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் 'கலைஞர் ஒரு கருத்துச் சுரங்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு தலைமையும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் 'கலைஞரின் திரைக்காவியம்' என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்கு தலைமையும் ஏற்று நடத்தினார்கள்.
புத்தகக் கண்காட்சியை இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கவியரங்க நிகழ்வை மும்பை இலக்கியக் கூடம் அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் தொடங்கி வைத்தார்.
நாட்டியரங்க நிகழ்ச்சியை பத்மினி இராதாகிருஷ்ணனும் இசையரங்க நிகழ்வினை ராணி சித்ராவும் சிறப்பித்தார்கள்.
சிறந்த கலை, இலக்கிய, சமூகப் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு 'செந்தமிழ் பாரிவேள்', 'செம்மொழித் தமிழ்செம்மல் விருது', 'செந்தமிழ்க் கலைச்செம்மல் விருது', 'சமுக செயற்பாட்டாளர் விருது' என விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சண்.அருள்பிரகாசம் நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
சீர்மிகு இந்த மாநாட்டில் அமைச்சர் முன்னிலையில் கலைஞர் தமிழ் ஆய்வு மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37