18 Sep 2020 2:56 pmFeatured

மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 142 வது ஆண்டு பிறந்த நாள் விழா 17 .9. 2020 வியாழன் மாலை 6:00 மணிக்கு தாராவி பெரியார் சதுக்கத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
விழாவுக்கு மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை திக செயலாளர் இ.அந்தோணி அனைவரையும் வரவேற்றார் தந்தை பெரியார் படத்துக்கு திராவிடர் கழக மூத்த உறுப்பினர் சோ.சௌந்தரபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அனுமந்தா நந்தபல்லி மும்பை புறநகர் திமுக கொள்கை பரப்புரையாளர் முகமது அலி ஜின்னா மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் பெரியார் அம்பேத்கர் சமூக நீதிப் பேரவை தலைவர் ராஜேந்திரன் அம்பேத்கர் இயக்க சமூக பணியாளர் சசிகாந்த் கெய்க்வாட் திராவிடர் கழகம் பெரியார் பாலாஜி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்
இந்த நிகழ்ச்சியில் மும்பை திமுக பொருளாளர் ச.பொன்னம்பலம் மும்பை திமுகவைச் சேர்ந்த மாறன் ஆரிய சங்காரன் மகிழ்ச்சி மகளிர் பேரவையை சேர்ந்த க.வளர்மதி தொல்.காமராஜ் அய்.செல்வராஜ் அ.குணசேகரன், ஜெய்பீம் பவுண்டேஷன் ராஜா குட்டி நித்தியானந்தன், வேல்முருகன், வஞ்சித் பகுஜன் அகாடமி கட்சியைச் சேர்ந்த சுனில் காம்பளே, வருமான வரித்துறை அதிகாரி உதயசங்கர், மைக்கல் இளங்கோ நரேஷ் சொனவானே உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் மும்பை திக பொருளாளர் அ.கண்ணன் நன்றி கூறினார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37
வாழ்க பெரியார்