Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் மும்பை தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா

17 Sep 2019 12:12 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை தி.மு.க. சார்பில் தந்தை பெரியார்,   பேரறிஞர்  அண்ணா ஆகியோரது பிறந்த நாள் விழா, கழகம் தோன்றிய நாள் ஆகிய  முப்பெரும் விழா 15.09.2019 ஞாயிறு மாலை 7.00 மணியளவில் தாராவி கழகப் பணிமனை கலைஞர் மாளிகையில்  பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.  

       தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திருமதி செய்யது பாத்திமா,   பேரறிஞர்  அண்ணா திருவுருவப் படத்தை திருமதி கோகிலா உத்தமன்,   முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்தை திருமதி  ரூபினா பர்ஜானா ஆகியோர் திறந்து வைத்தனர்.  

அவைத் தலைவர் வே.ம. உத்தமன், பொருளாளர் சா.பொன்னம்பலம், மூத்த தலைவர்கள் பாந்திரா கிளை செயலாளர் க.மு. மாணிக்கம், பணகுடி ம.சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அவைத்தலைவர் வே.ம. உத்தமன் அவர்களுக்கு பிறந்த நாள் பொன் விழாவை முன்னிட்டு அவருக்கு மும்பை தி.மு.க. சார்பில் ஆளுயர ரோஜா மலர் மாலை, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பல்வேறு கிளைகளின் சார்பில் சால்வைகள் அணிவிக்கப்பட்டது.

திரு என்.வி. சண்முகராசன் வரவேற்புரையாற்ற மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்
க. மூர்த்தி, தானே  கே.ஏ.ஜாகிர்உசேன், மலபார் குன்று  செயலாளர்  சேரை  பிரகாஷ்,  வக்கோலா சேலம் மா. சீனிவாசன், தோ.செ. கருணாநிதி,  தாராவி கிளை பொருளாளர்  எம்.அலி முகமது,  ஸ்டீபன் ஜெயராஜ்  ஆகியோர் உரையாற்றினர்.    

அ. கண்ணன், வழக்கறிஞர் எஸ், சிற்றரசன், என். சேர்மன் துரை, து. முத்துகுமார், இ. அன்பழகன், பா. மோகன்ராஜ், முத்துசாமி,  கௌசல்யா உத்தமன், அ. பாத்திமா, பேபிரானி. கே. கோவிந்தன், ஜி. ஜெயராம், சேக், நிஷாபானு, மு.முகதீன், குமார் ரப்ரலநல்லுஷா, மு.முஹைவின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் அலுவலகச்  செயலர்  க. இராசன்   நன்றி கூறினார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

117162
Users Today : 16
Total Users : 117162
Views Today : 20
Total views : 447486
Who's Online : 0
Your IP Address : 18.97.9.171

Archives (முந்தைய செய்திகள்)