07 Aug 2021 9:50 amFeatured

பேராசிரியர் முத்துலிங்கம் பிரபு.
விட்டல்வாடி-கல்யாண்
முத்தமிழ் காவலனே
ஓய்வறியா சூரியனே
இலக்கணத்தின் வித்தகனே
அஞ்சுகத்தின் தலைமகனே…!
நீயில்லா தமிழகம்
கருவரையில்லா
கோயிலாகுதே…!
உன் எழுத்தின் சுவையை
இறைவனும் காண
மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்றாயோ…?
ஆசிரியர் மகான்களுக்கோர்
அங்கிகாரம் கொடுத்தவரே.!
புதுக்குறள் எழுத
திருக்குறளுடன் சேர்ந்தாயோ!
உலகம் உருளும் மட்டில்
உம் தமிழ்ப்பால்
நிலைத்து நின்று
பகுத்தறிவு புகட்டிடும்
பல்லுயிர் நாட்டினர்க்கு…!
வாழ்க வளர்க
கலைஞர் காவியம்
உம் தமிழ் வழியில் என்றும்
பேராசிரியர் முத்துலிங்கம் பிரபு.






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37