04 May 2025 1:43 pmFeatured
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஐடி நிபுணர்களான பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் ஆகியோரின் ஒரே மகளான வியானாவுக்கு கடந்தாண்டு முளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அந்த 3 வயது குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஜெயின் மத நம்பிக்கையின் மீது அக்குடும்பத்தின் கவனம் திரும்பியது
மார்ச் 21 அன்று, ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை சந்தித்த குழந்தையின் பெற்றோர், அவரது பரிந்துரையின் பேரில் 'சாந்தாரா' எனும் மத சடங்கை ஏற்றனர். இதில், உயிரிழக்கும் வரை உண்ணாமல் இருப்பது வழக்கம். இது மரணத்திற்கே வழிவகுக்கும் துறவுச் செயலாகும்.
மூன்று வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது
சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார்.
உலக சாதனை!?
இதில் கொடுமையென்னவென்றால் இதன்மூலம் மிக குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று Golden Book of World Records என்ற உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு இது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், தந்தை பியூஷ் ஜெயின் கூறியதாவது, “மரணம் என்னும் நோக்கத்தில் அந்த சடங்கில் ஈடுபடவில்லை, ஆனால் குரு அவளது நிலைமை மோசமென கூறியதால், குடும்பம் ஒப்புக்கொண்டது” என்றார் குடும்பத்தினர் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர் தெரிவித்தார்.
வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் கூறினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நெட்டிசன்கள் மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று கூறி இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.